Breaking

Saturday, September 21, 2019

ரூபாய் நோட்டு பற்றிய ஒரு கதை

ரூபாய் நோட்டு பற்றிய ஒரு கதை 

A story about a banknote


ஹோட்டல் முதலாளியின் மாப்பிள்ளை 500 ரூபாய் நோட்டு ஒன்றை அசல் நோட்டு போல தத்ரூபமாக ஜெராக்ஸ் செய்து கொண்டான். அந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை   சட்டைப் பையில் வைத்துக் கொண்டு தனது மச்சான் ஹோட்டலுக்கு போனான். கல்லாவில் இருந்த மச்சானிடம் சிறிது நேரம் பேசிவிட்டு பையிலிருந்த ஜெராக்ஸ் 500 ரூபாய் நோட்டை எடுத்து மச்சானிடம் கொடுத்து "மச்சான் இதை கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள் நான் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சொல்லி அவரிடம் கொடுத்துவிட்டு போய்விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு பால் ஊற்றுபவர் "தனக்கு ஒரு 500 ரூபாய் அவசரமாக வேண்டியிருக்கிறது. தனக்கு வர வேண்டிய பால் பணத்தில் கழித்துக் கொள்ளலாம் " என்று சொல்லி முதலாளியிடம் பணம் கேட்கிறார். கல்லாவில் 500 ரூபாய் சேரவில்லை. சிறிது நேரம் யோசித்த முதலாளி தனது மாப்பிள்ளை கொடுத்துவிட்டு சென்ற 500 ரூபாயை பால்காரரிடம் கொடுக்க அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு கடையை விட்டு சென்று விடுகிறார்

மாப்பிள்ளை வருவதற்குள் வியாபாரத்தில் 500 ரூபாய் தேற்றிவிட முடியாதா என்ற நம்பிக்கையில் தான் அந்த பணத்தை எடுத்து பால்காரரிடம் கொடுத்து விட்டார் ஹோட்டல்காரர்.

ஹோட்டலில் இருந்து 500 ரூபாயை வாங்கி சென்ற பால்காரர் நேராக தனது மனைவிக்குப் பிரசவம் பார்த்த லேடிடாக்டரை சந்தித்து அவருக்கு பாக்கி வைத்திருந்த 500 ரூபாயை கொடுக்கிறார். டாக்டரும் அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள அங்கு இருந்த தனது கார் டிரைவரிடம் அந்தப் பணத்தை கொடுத்து பஜாரில் இருக்கிற டெய்லர் கடையில் பழைய பாக்கிக்கு இந்த 500 ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு பிள்ளைங்களுக்கு எடுத்து வைத்திருக்கும் புது துணிகளை தைக்க அளவெடுக்க வரச் சொல்லவும் என்று சொல்லி டிரைவரை டெய்லர் கடைக்கு அனுப்புகிறார் டாக்டர்.

 டிரைவரும் டெய்லர் கடைக்குப் போய் "டாக்டர் அம்மா வீட்டு பாக்கிக்கு இந்த 500 ரூபாய்யை வாங்கிக் கொள்ளவும். வீட்டில் பிள்ளங்களுக்கு புது துணி அளவெடுக்கவும் வரச்சொன்னார்கள் " என்று தகவல் சொல்லிவிட்டு நகர்ந்தார் டிரைவர்.

 காஜாப் பையனிடம் "கடையைப் பார்த்துக்கொள்" என்று சொல்லி டிரைவர் கொடுத்த 500 ரூபாயை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்கு கிளம்பினார் டெய்லர்.

 கல்லாவில் அமர்ந்திருந்த ஹோட்டல் முதலாளியிடம் "ஐயா என் மகளின் சடங்குக்கு தங்கள் கடையில் சாப்பாடு வாங்கிய வகையில் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது இந்த 500 ரூபாயை வாங்கிக்கொண்டு கணக்கை நேர் செய்து கொள்ளுங்கள்" என்று டிரைவர் கொடுத்த 500 ரூபாயை ஹோட்டல் முதலாளியிடம் தருகிறார் டெய்லர். சரி அப்படியே செய்து கொள்ளலாம் என்றபடியே ஐநூறு ரூபாயை வாங்கி வைத்துக் கொண்ட முதலாளி அதை கல்லாவில் தனியே ஒரு டப்பாவில் போட்டு வைக்கிறார்.

 ஏனென்றால் மாப்பிள்ளை வந்து கேட்டால் 500 ரூபாய் நோட்டு தரவேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த 500 முழு ரூபாய் நோட்டை பத்திரப்படுத்தி வைக்கிறார்.

 சிறிது நேரத்தில் அவரின் மாப்பிள்ளை வந்து "மச்சான் நான் கொடுத்த 500 ரூபாய் கொடுங்கள் " என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.தான் கொடுத்த 500 ரூபாய்   ஜெராக்ஸ் நோட்ஸ் தான் அது என்பதை உறுதி செய்துகொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் முதலாளியின் மாப்பிள்ளை.

வெளியே வந்த மாப்பிள்ளை ஜெராக்ஸ் எடுத்த 500 ரூபாயை சுக்கல் சுக்கலாகக் கிழித்துக் காற்றில் பறக்க விட்டார். இந்த 500 ரூபாய் ஒரு சுற்று சுற்றி  வந்ததில்  நடந்தது என்ன என்று கொஞ்சம் பார்ப்போம்.

முதலாளி பால்காரனுக்கு கொடுக்கவேண்டிய 500 ரூபாய் பாக்கி கணக்கு நேராகிவிட்டது. அதுபோலவே பால்காரன் டாக்டருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேர் ஆகிவிட்டது. அப்படியே டாக்டர் டெய்லருக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது. அதுபோலவே டெய்லர் ஹோட்டலுக்கு கொடுக்க வேண்டிய கடன் நேராகிவிட்டது.

 இப்பொழுது ஜெராக்ஸ் நோட்டும் சுக்கல் சுக்கலாகி காற்றில் பறந்து விட்டது.

ஆனால் இத்தனை பேர் கடனும் நேராகி இருப்பது நிஜமே. இதில் நஷ்டம் அடைந்தவர் யாரும் இருக்கிறாரா? அல்லது மாயாஜாலம் ஏதும் நடந்துள்ளதா?
*ஆகையால் நண்பா்களே பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே. நட்பு, உறவு இதற்கு மதிப்பளிப்போம்

திடமான நோக்கம்

சத்தியத்தை திடமான நோக்கத்தோடு இணைப்பது,ஒருவரை அனைத்து பிரச்சனைகளையும் வெல்ல செய்கிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து

பொதுவாக, நாம் ஒரு சத்தியத்தை செய்யும்போது,பெரும் உற்சாகத்தோடு அதை மேற்கொள்கின்றோம். நாம் செய்வோம் என்று கூறியவற்றை நிறைவேற்றுவதற்கு, நாம் கடமைபட்டிருப்பதை நாம் உணர்கின்றோம். ஆனால், நாம் சிறிதளவு எதிர்ப்பையோ அல்லது சிரமத்தையோ எதிர்நோக்கும்போது, நாம் நம்பிக்கை இழந்து, முற்றிலும் அந்த முயற்சியை கைவிட்டுவிடும் மனப்போக்கு உடையவர்களாக இருக்கின்றோம்.

செயல்முறை

என்னிடம் ஒரு மாற்றத்தை கொண்டுவந்து, என்னுடைய சத்தியத்தை நிறைவேற்ற, திடமான நோக்கம் என்னும் நற்குணத்தை நான் பயன்படுத்தவேண்டும். நான் மேற்கொண்ட ஒன்றை செய்து முடிப்பதற்கு, என்னுடைய உற்சாகம் குறைவதை நான் உணரும்போது, எனக்கு நானே,நான் செய்த சத்தியத்தை நினைவுபடுத்திக்கொள்வது அவசியம். இது, என்னுடைய எண்ணங்கள் மற்றும் சொற்களை, செயல்களாக மாற்றுவதற்கு இருக்கும் தடைகளை வெல்ல எனக்கு உதவி செய்யும்

விவேகம்:

விவேகத்துடன் இருப்பவரே மனதை போஷாக்குடன் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

தினந்தோறும், நாம் உணவளித்து உடலை பேணுவதற்கு நேரம் கொடுக்கின்றோம். நாம் போதுமான அளவு உணவு கொடுக்காதபோதுஅதாவது நமக்கு பசிக்கிறது என்பதை நாம் உணர்கின்றோம். ஆனால் நமக்கு தேவையான ஆன்மீக உணவைப்பற்றி நாம் அவ்வளவாக அறியவில்லை. நம்முடைய ஆன்மீக போஷாக்கில் குறைபாடு ஏற்பட்டால், நம்முடைய மனம், வெளியே இருந்து வரக்கூடிய தாக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் பலவீனமாக இருக்கும்.

செயல்முறை:

தினந்தோறும் ஏதேனும் நல்ல கருத்துக்களை படிப்பது அல்லது கேட்பது என்னுடைய மனதை மகிழ்ச்சியாகவும் வலிமையாகவும் வைத்திருக்க உதவும். நல்ல எண்ணங்களை மீண்டும் மீண்டும் சிந்திப்பது,நான் கேட்டதை நினைவு படுத்திக்கொள்ள எனக்கு உதவி செய்கிறது. அதன்பிறகு, நான் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதால், மேற்கொண்டு என்னுடைய வழியில் கடினமான சூழ்நிலைகள் வரும்போதும்,அவற்றை சந்திக்க என்னிடம் உள்ளார்ந்த ஆற்றல் இருக்கிறது

நம்பிக்கை:

நம்பிக்கை ஒத்துழைப்பை பெற்றுத் தருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

மற்றவர்களுடைய உதவியின்றி நம்மால் காரியங்களை செய்யமுடியும் என்று நாம் சிந்திக்கும்போது, நாம் கர்வமுடையவராக இருக்கின்றோம் அல்லது நம்மால் மற்றவர்களை நம்ப முடியவில்லை என்றும் பொருள்கொள்ளாலாம். இந்த நம்பிக்கையின்மையினால் நாம் நம் கையிலிருக்கும் காரிய அனுகூலத்திற்காக மற்றவர்களுடைய திறமையை பயன்படுத்தும் சந்தர்ப்பத்தை இழக்கின்றோம். ஒருவரின் பயனுள்ள திறமையை நாம் இழப்பதோடு, அவரோடு சேர்ந்து பணியாற்றி கிடைக்கும் வெற்றியையும் அது குறைத்துவிடுகிறது.

செயல்முறை

ஒத்துழைப்பு மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை நான் புரிந்துகொள்வது அவசியம். நான் என்னுடைய நேரத்தையும் வளங்களையும் மற்றவர்களின் திறமைகளை வளர்ப்பதிலும் பயிற்சி அளிப்பதிலும் முதலீடு செய்யும்போது, அது அவர்களிடமிருக்கும் சிறப்புத்தன்மைகளை வெளிக்கொண்டுவரும். அவர்கள் அதிகமாக பங்காற்றும்போது அல்லது அவர்களுடைய திறமைகளை சிறப்பான முறையில் பயன்படுத்தும்போது,நாம் அனைவரும் சிறப்பான பலனை அடைய முடியும்.

முழுமைதன்மையை நோக்கமாக கொண்ட ஒருவரே  தடைகளிலிருந்து கற்றுக்கொள்கின்றார்.

சிந்திக்க வேண்டிய கருத்து: உயர்ந்த நோக்கம் கொண்ட ஒருவரின் வாழ்க்கையில் அனேக தடைகள் வருவதை நாம் பார்க்கின்றோம். ஒரு அழகான விக்கிரகம் மிக நேர்ப்புடன் செதுக்கப்படுவது போல், ஒவ்வொரு தடையும் உள்ளிருக்கும் சில அல்லது பல குறைபாடுகளை அகற்றவே வருகின்றன. இந்த சிறிய இரகசியத்தை புரிந்து கொள்ளும் ஒருவர்,  ஒவ்வொரு தடையையும் வளர்ச்சிக்கு அழகான படிப்பினைகளாகவும் உள்ளிருக்கும்  சிறந்த குணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்த முடியும்.

அனுபவம்: நான் என் சொந்த உள்ளார்ந்த முழுமைதன்மையை வெளியே கொண்டுவர கடமைப்பட்டுள்ள போது,  என் வாழ்க்கையில் வரும் தற்காலிக சூழ்நிலைகள் என்னை தடுத்து நிறுத்த முடியாது. நான் நம்பிக்கையுடன் முன் நோக்கி செல்கின்றேன்,  என்னை உள்ளுக்குள் நன்கு பார்க்க நேரம் கொடுக்கிறேன் மேலும் என்னுள் மறைந்திருக்கும் ஆற்றலை அறிந்துக்கொள்கின்றேன். நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் முழுமைதன்மையை நோக்கி மென்மேலும் நெருக்கமாக செல்லமுடிகின்றது

மரியாதை பெற சிறந்த வழியானது சுயத்திற்கு மரியாதை அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: பொதுவாக அனைவருக்கும் மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற ஒர் எதிர்பார்ப்பு உள்ளது. ஒருவருடைய சொந்த நல்லுணர்வுகள் முற்றிலும் மற்றவர்களை சார்ந்து இருக்கும்போது, மிகவும் சிறியதாக இருந்தாலும் கூட, அவர் சூழ்நிலைகளை எதிர்த்து செயலாற்றும் போக்கு உடையவராக இருகின்றார்.  மறுபுறம், சுயத்திற்கு மரியாதை கொடுக்ககூடிய ஒருவரால் மற்றவர்களுக்கும் கூட மரியாதை கொடுக்க முடிகின்றது. மேலும் அவர் மரியாதை பெறுகிறார்.

அனுபவம்: என்னுடைய சொந்த சிறப்புகளைப் என்னால் பார்க்க முடியும்போது என்னை நானே மதிக்க முடிகின்றது. அதன்பிறகு நான் என்னுடைய சொந்த உள்ளார்ந்த மனநிலையிக்கு வெளிப்புற ஆதாரங்களை சார்ந்து இருக்கவில்லை. நான் அனைத்து வெளிப்புற தாக்கங்களிலிருந்து விடுபட்டு,  என்னை சுற்றியிருப்பவர்களுக்கு ஓர் பாதிப்பை ஏற்படுத்தும் ஒர் மூலாதாரமாக ஆக முடிகின்றது. நடக்கும் ஒவ்வொன்றுடனும் என் சொந்த உள்ளார்ந்த நிலையை நான் தொடர்ந்து வளப்படுத்திக்கொள்கிறேன்.

ஆசீர்வாதங்களைப் பெறுவது என்றால் அவற்றுக்கு தகுதியுடையவர்கள் ஆகுவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:சில நேரங்களில் கடவுளிடமிருந்து அல்லது அதிக சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுபவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற விருப்பம் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் அன்பு, மரியாதை மற்றும்  ஆசீர்வாதங்கள் ஆகியவற்றை உண்மையில் வெல்வதற்கு எண்ணம் கொண்ட ஒருவர் அதற்கான தகுதியுடையவராக இருக்க முயற்சி செய்கிறார். எனவே, அவர் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் அனைத்திலும் மென்மேலும் சிறப்பாக செய்ய முயற்சிக்கின்றார். இவ்வாறு அவர் அனைவரின் ஆசீர்வாதத்திற்கும் தகுதியுடையவராகிறார்.

அனுபவம்: நான் தொடர்ந்து மென்மேலும் என்னை தகுதியுடையவனாக ஆக்கிக்கொள்ளும்போது, என்னுடன் தொடர்பு கொள்ளும் அனைவரிடமும் அன்பு,  நம்பிக்கை மற்றும் ஆசீர்வாதங்களை இயற்கையாகவே வெல்கின்றேன். நான் செய்யும் அனைத்திற்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்;  கடவுளுடைய ஆசீர்வாதங்கள் எனக்கு இருக்கின்றன என்பதை நான் அறிவேன்,  ஏனென்றால் நான் முயற்சி செய்கிறேன். எனக்கு பயமோ அல்லது பாதுகாப்பற்ற உணர்வோ கிடையாது,  ஆனால் நான் நம்பிக்கையோடு செய்ய வேண்டியதைச் செய்துக்கொண்டிருக்கின்றேன்

சுதந்திரமாக இருப்பதென்றால், குறிப்பிட்ட ஒரு விஷயத்தின்/பொருளின் பந்தனத்திலிருந்தும் விடுபட்டிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு காரியத்தில் வெற்றிபெற ஒரு குறிப்பிட்ட விஷயத்தை/பொருளை சார்ந்திருக்கும் ஒருவர் அந்த பந்தனத்தின் கீழ் இருக்கின்றார். அத்தகைய ஒரு நபரால் தனது முழு திறமையுடன் முயற்சி செய்யமுடியாது உள்ளது,  ஏனெனில் அவர் எப்போதும் குறைவாக இருப்பதை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார். மறுபுறம், ஒன்றுமே கிடைக்காத போதும் ஒருவர் கையிலிருக்கும் பணியைச் செய்வதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயலும்போது அவர் புதிய வளங்களைக் கண்டுபிடிப்பார். இந்த வளங்களையும் பயன்படுத்தி அவரால் அந்த காரியத்தை நிறைவேற்ற முடியும்.

அனுபவம்: நான் என்னிடம் என்ன குறைவாக இருக்கிறது என்பது பற்றி சிந்திப்பதை விட நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி மேலும் யோசிக்கும்போது,  என்னால் என்னிடம் இருப்பதை பற்றி திருப்தியாக இருக்கமுடிகிறது. நான் என் வாழ்கையில் இருக்கும் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் என் சொந்த நலனுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தமுடிவதை பாராட்டுகிறேன். ஆசைகளில் மட்டுமே சிக்கிக்கொள்ளாமல் நான் சாதிக்க விரும்புவதற்காக என்னால் வேலை செய்ய முடிகிறது.


வீணான சிந்தனையை முடிப்பதற்கான ஒரு வழியானது, தீர்வைக் கண்டுபிடிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: எதிர்மறையான ஏதோவொன்று நடக்கும் போது மனம் வீணான மற்றும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகிறது. அத்தகைய நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தெளிவான புரிதல் இல்லை, எனவே நேர்மறையாக இருப்பது சிரமம். ஆனால் பிரச்சனை அடையாளம் காணப்பட்டதும்,  சரியான தீர்வை கண்டுபிடித்ததும், அதாவது, சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதும் வீணான எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்கள் முடிவிற்கு வருகின்றன.

அனுபவம்: நான் ஒவ்வொரு அடியிலும் சரியான தீர்வை கண்டுபிடிக்கும்போது,  எதிர்மறையான சூழல்கள் நடக்கும்போதும், என்னால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருக்க முடிகிறது. நான் கையிலிருக்கும் பிரச்சனை பற்றி கவலைப் படவில்லை ஆனால் இந்த பிரச்சனை என் சொந்த பலம் மற்றும் திறனை அதிகரிக்க வந்திருக்கிறது என்று எனக்கு புரிதல் இருக்கிறது. எனவே அனைத்து சூழ்நிலைகளிலும் என் உள்ளார்ந்த ஆக்கபூர்வமான மனநிலையை என்னால் பராமரிக்க முடிகிறது

நல்லாசிகளை கொடுக்கவும் எடுத்துக்கொள்ளவும் முயற்சி செய்வதென்றால், தொடர்ந்து திருப்தியை அனுபவம் செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: ஒருவரின் குணாதிசயம் எவ்வாறாக இருந்தாலும்,  நல்லாசிகளை கொடுப்பதும் எடுத்துக்கொள்வதற்கான இந்த நோக்கம் இருந்தால்,  ஒவ்வொரு தொடர்பிலும் சாதகமான தன்மை இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் செயலும் ஆக்கபூர்வமான இருப்பதில் கவனம் வைக்கப்படுகிறது. பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொடுக்கின்றன, அடுத்தவருக்கு அவர் இருப்பதை விட சிறப்பானதாக இருப்பதற்கு சில வகையான ஆதரவை வழங்குகிறது.

அனுபவம்: நான் அனைவருக்கும் நல்லாசிகளை கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளும்போது, மற்றவர்களிடமிருந்து நல்லாசிகளை என்னால் பெறமுடிகிறது. சூழ்நிலைகள் மற்றும் மக்களுடைய எதிர்மறையின் பாதிப்பிலிருந்து என்னால் விடுப்பட்டு இருக்க முடிகிறது. நான் வெளிப்புறமாக எதையும் பெறாவிட்டாலும், தொடர்ந்து உள்ளார்ந்த மகிழ்ச்சியும் மனநிறைவையும் அனுபவம் செய்கின்றேன்.

No comments:

Post a Comment