ஒருவரின் சொந்த
குணங்களின் பற்றிலிருந்து
விடுப்பட்டிருப்பது என்பது
சுயத்தில் மாற்றத்தை
செய்யும் திறனைக்
கொண்டிருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: ஒருவர்
சுயத்தின் மீது
கொண்டிருக்கும் பற்றின்
முக்கிய வடிவம்
அவரின் சொந்த
சிறப்புகள் மற்றும்
பலவீனங்களுக்கான பற்றை
கொண்டிருப்பதாகும். இந்த
வகையான பற்றிலிருந்து
தன்னை விடுவிக்கும்
திறன் இருக்கும்போது, இரண்டிலும் மாற்றத்தை
கொண்டுவரும் திறன்
உள்ளது. அவற்றைப்
பற்றிய விழிப்புணர்வு
உள்ளது,
ஆனால் அவற்றினால்
பந்தனமில்லை. விசேஷ
குணங்களை அன்போடு,தேவைக்கேற்ப பயன்படுத்தக்கூடிய
திறன் உள்ளது.
பலவீனங்களை முடிக்கவும்
சிறப்பு கவனம்
செலுத்தப்படுகிறது.
அனுபவம்: நான்
பற்றிலிருந்து விடுபடும்போது, நான் அவற்றைப்
பற்றி அறிந்திருக்கிறேன், ஆனால் எனக்குள்
இருக்கும் எதிர்மறையின்
முன்னிலையில் சிறப்புகளின்
ஆணவமோ அல்லது
கீழ்த்தரமான உணர்வுகளோ
இல்லை. நான்
அவற்றிலிருந்து விடுப்பட்டிருப்பதை
என்னால் அனுபவம்
செய்ய முடிகிறது, மேலும் எனது
சிறப்புகளை எளிதில்
பயன்படுத்த முடிகிறது.
பலவீனங்கள் இருப்பதால்
நான் கவலைப்படவில்லை,
ஆனால் அவற்றை
எளிதாக வெல்ல
முடிகிறது
நேர்மறையான எண்ணங்களில்
கவனம் செலுத்துவது
சக்தியையும் வளர்ச்சியையும்
தருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: எண்ணங்கள்
எதுவாக இருந்தாலும், அந்த எண்ணங்கள்
சக்திவாய்ந்தவை. இது
ஒரு விதையின்
வளர்ச்சி போன்றது.
ஒரு சிந்தனை, ஒரு நேர்மறையான
சிந்தனை, மனதில்
விதைக்கப்பட்டு,
அது கவனம்
கொடுக்கப்படும்போது, அது
சூரிய ஒளி
ஆற்றலைச் சேர்ப்பது
போல மாறுகிறது.
அவற்றில் அதிக
கவனம் இருக்கும்போது,
இந்த எண்ணங்கள்
வளரத் தொடங்குகின்றன.
அனுபவம்: ஒவ்வொரு
காலையிலும் நான்
ஒரு நேர்மறையான
சிந்தனையை உருவாக்கி, அதற்கு நாள்
முழுவதும் கவனத்துடன்
தண்ணீர் ஊற்றும்போது, நான் மேலும்
மேலும் சக்திவாய்ந்தவனாக
இருப்பதைக் காண
முடிகிறது. எதிர்மறை
சூழ்நிலைகள் அல்லது
எதிர்மறையாக உள்ளவர்கள்
என்னைப் பாதிக்கவில்லை, ஆனால் அந்த
எதிர்மறையை முடிக்க
நான் ஒரு
சக்திவாய்ந்த ஆதாரமாக
மாறுகிறேன். இந்த
நேர்மறையான சிந்தனையை
அனைத்து சூழ்நிலைகளிலும்
என்னால் பராமரிக்க
முடிகிறது
கடவுளின் அன்பு
உள்ளிருந்து மிகச்
சிறந்தவற்றை வெளிகொண்டுவருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: சம்பூர்ணத்தின்
உருவமாக இருக்கும்
கடவுள்,
அவருடன் இணைந்திருப்பவருக்கு
உத்வேகம் மற்றும்
சக்தியின் ஆதாரமாக
மாறுகிறார். கடவுளுடனான
தொடர்பையும்,
அவருடைய அன்பின்
அனுபவத்தையும் கொண்டு, அமைதி மற்றும்
தூய்மையின் உள்ளார்ந்த
குணங்களுடன் தொடர்பில்
இருப்பது எளிதானது.
அனைத்து சூழ்நிலைகளிலும், கடவுளின் பிரசன்னம்
உள் அழகை
வெளிப்படுத்த ஒரு
சிறந்த உந்துதலாக
மாறுகிறது.
அனுபவம்: நான்
கடவுளுடன் ஆழமாக
இணைந்திருக்கும்போது,
உள்ளார்ந்த அழகுடன்
என்னால் இணைக்க
முடிகிறது. கடவுளின்
அன்பு என்
உள்ளார்ந்த அழகுடன்
என்னை மீண்டும்
இணைக்க ஆற்றல்
மூலமாகிறது. அனைத்து
சூழ்நிலைகளிலும் இந்த
உள் அழகை
என்னால் பராமரிக்க
முடிகிறது என்பதை
நான் காண்கிறேன்.
சூழ்நிலைகள் அல்லது
மக்களால் நான்
எதிர்மறையாக பாதிக்கப்படவில்லை
கவனக்குறைவின் தளர்வான
திருகை இறுக்குவது
என்றால் சக்திவாய்ந்தவராக
இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: கவனக்குறைவாக
இருக்கும் ஒருவரால்
தன்னிடம் இருக்கும்
சக்திகளையும் திறன்களையும்
பயன்படுத்த முடியாதுள்ளது.
உள்ளிருக்கும் அனைத்து
நேர்மறையான குணங்களும்
வீணாக்கப்படுகின்றன,
ஏனென்றால் கவனக்குறைவாக
இருக்கும் ஒருவரால்
அவற்றை சிறந்த
முறையில் பயன்படுத்த
முடியாதுள்ளது. ஆனால்
கவனக்குறைவின் தளர்வான
திருகை இறுக்கக்கூடியவர்
அவருக்குள் இருக்கும்
திறன்களை அடையாளம்
கண்டு பயன்படுத்த
முடியும். எனவே
அத்தகைய நபருக்குள்
இருக்கும் சக்தி
புலப்படும்.
அனுபவம்: நான்
கவனக்குறைவிலிருந்து விடுபட
முடிந்தால்,
லேசாகவும் மகிழ்ச்சியுடனும்
என்னால் முன்னேற
முடிகிறது. எந்தவொரு
சூழ்நிலையிலும் எந்த
சிரமமான அனுபவமும்
இல்லை,
எந்தவொரு காரணத்தையும்
கூறாமல் அனைத்தையும்
என் திறனுக்கு
ஏற்றவாறு செய்கிறேன்.
அனைத்து சூழ்நிலைகளிலும்
நான் சக்திவாய்ந்தவனாக
இருப்பதை அனுபவம்
செய்ய முடிகிறது, ஏனெனில் நான்
சூழ்நிலையின் மாஸ்டர்
ஆவேன்.
தெய்வீக ஞானம்
அமைதியாக இருப்பது
என்பது சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிப்பதாகும்.
சிந்திக்கவேண்டிய கருத்து:
சுற்றிலும் எதிர்மறை
இருக்கும்போது கூட
உள்ளார்ந்த அமைதி
இருந்தால், சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் திறன்
உள்ளது. சவாலான
காலங்களில் தேவைப்படுபவர்களுக்கு
இந்த ஆதரவை
வழங்குவதே ஒருவர்
செய்யக்கூடிய மிகப்பெரிய
சேவை ஆகும்.
குழப்பமான சூழ்நிலைகளில்
கூட நிம்மதியாக
இருப்பவர் ஒரு
எடுத்துக்காட்டு ஆகின்றார்.
அனுபவம்: அனைத்து
சூழ்நிலைகளிலும் எனது
சொந்த உள்ளார்ந்த
நிலையை அமைதியாக
பராமரிக்க முடிந்தால், நடக்கும் அனைத்திலிருந்தும்
என்னால் கற்றுக்கொள்ள
முடிகிறது. நேர்மறையின்
அதிர்வுகளால் என்னைச்
சுற்றியுள்ளவர்களுக்கு என்னால்
நன்மையளிக்க முடிகிறது.
தேவைப்படும் அனைவருக்கும்
நான் உத்வேகம்
மற்றும் ஆதரவின்
ஆதாரமாக மாறுகிறேன்.
ஒத்துழைப்பு எளிதாக
வெற்றியைக் கொண்டுவருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து: ஒன்றிணைந்து
செயல்படுவது என்பது
ஒவ்வொரு நபரின்
சிறப்புகளையும் பணியில்
பங்களிக்க அனுமதிப்பதாகும்.
மற்றவர்களையும் அவர்களின்
பங்களிப்பையும் பாராட்டும்
திறன் உள்ளது.
ஒருவரின் சொந்த
சிறப்புகளின் ஆணவம்
இல்லை,
ஆனால் சுற்றியுள்ள
அனைவரின் உண்மையான
மற்றும் இயல்பான
பாராட்டு உள்ளது.
எனவே பணிக்கும், நபருக்கும் வெற்றி
இருக்கிறது.
அனுபவம்: நான்
எதையாவது செய்வதில்
மற்றவர்களுடன் ஈடுபடும்போதெல்லாம்,
பணி முக்கியமானது,
ஆனால் ஒத்துழைப்பின்
முக்கியத்துவத்தைப் புரிந்து
கொள்ளும்போது ஒவ்வொரு
நபரின் சிறப்புகளையும்
என்னால் அடையாளம்
காண முடிகிறது.
மற்றவர்கள் அவர்களின்
சொந்த பங்களிப்பைச்
செய்ய என்னால்
நம்பிக்கை வைக்க
முடிகிறது, அவ்வாறு
செய்ய அவருக்கு
இடம் தருகிறேன்.
மன உறுதி
மூலம் அசாத்தியமானது
கூட சாத்தியமாகும்.
மேலும் வெற்றி
நிச்சயம்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: மன
உறுதி கொண்டவர்
கடினமான சூழ்நிலைகளிலும்
மனம் தளராதவர்.
சுய முன்னேற்றத்திற்காக
அனைத்து சவால்களையும்
அவரால் பயன்படுத்த
முடியும். கையாள
கடினமாக இருக்கும்
சூழ்நிலைகளால் அவர்
ஒருபோதும் தடுமாற
மாட்டார்,
ஆனால் தடைகளை
கடக்க அவரால்
புதிய ஆக்கப்பூர்வமானவற்றை
வெளிக்கொண்டு வர
முடியும்.
அனுபவம்: மன
உறுதி எனக்குள்
நம்பிக்கையை கொண்டுவருகிறது.
மேலும் நான்
சாதிக்க வேண்டியதை
அடைய எனக்கு
திறனை கொடுக்கிறது.
நான் என்னுடைய
சொந்த வெற்றியை
குறித்து உறுதியோடும்
நம்பிக்கையோடும் இருக்க
முடியும். இந்த
நம்பிக்கை பாதியில்
காரியத்தை விட்டுவிடாமல்
ஆனால் இறுதி
வரை ஏதாவது
செய்ய வேண்டும்
என்ற ஊக்கமளிக்கிறது.
என் பாதையில்
இருந்து என்னை
விலக்குவது போல்
தோன்றுகிற ஒவ்வொரு
தடையிலும் நான்
முன்னேற்றம் காண்கின்றேன். மென்மேலும் முன்னேறுகின்றேன்.
எனவே நான்
வெற்றியை அனுபவம்
செய்கின்றேன்.
ஞானம் பெற்றிருப்பது
என்றால் மகிழ்ச்சியுடன்
இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: துல்லியமான
ஞானத்தை அடிப்படையாகக்
கொண்ட சரியான
புரிதல் கொண்டவரால்
கடினமான சூழல்களில்
கூட திருப்தியை
தக்கவைத்துக்கொள்ள முடியும்.
சூழ்நிலைகள் மற்றும்
மக்களைப் பற்றிய
தெளிவான புரிதல்
இருப்பதால், அனைத்து
சூழ்நிலைகளிலும் சிறந்ததை
வழங்குவதில் சிரமம்
இல்லை. இத்தகைய
நபர் தனது
சொந்த திறமைகளை
வளப்படுத்திக்கொள்ள அனைத்து
சவால்களையும் பயன்படுத்துகிறார்.
அனுபவம்: நான்
ஞானத்தை சாதகமான
முறையில் ஒரு
கருவியாக பயன்படுத்தும்போது, நடக்கும் அனைத்தையும்
என்னால் புரிந்து
கொள்ள முடிகிறது.
நடக்கும் அனைத்திற்கும்
ஒரு காரணம்
இருக்கிறது என்பதையும்,
ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும்
கற்றுக்கொள்ள ஏதாவது
இருக்கிறது என்பதும்
எனக்குப் புரிகிறது.
எனவே நான்
சந்திக்கின்ற பல்வேறு
சூழ்நிலைகளால் நான்
வருத்தப்படவில்லை, ஆனால்
என் வழியில்
வரும் அனைத்தையும்
என்னால் மகிழ்ச்சியுடன்
ஏற்றுக்கொள்ள முடிகிறது
வலிமையாக இருப்பதென்றால்
உடலின் பாதிப்பிலிருந்து
விடுபட்டு இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
உடல் மனதின்
மீது செல்வாக்கு
செலுத்த அனுமதிப்பது
இருமடங்காக நோயுற்றிருப்பதாகும்.
தன்னை இருமடங்காக
நோயுற்றிருப்பதை அனுமதிக்கும்
ஒருவரால் உடலின்
நோயை சமாளிக்க
முடியாது. மறுபுறம், மனதளவில் சக்திவாய்ந்தவர்
நோயைச் சமாளிக்கும்போதும்
உள்ளார்ந்த பலத்தை
பராமரித்து அவரால்
மேலும் முயற்சி
செய்து அதை
முடிக்கவும் முடியும்.
அனுபவம்:
உடலின் நோயை
உணருவதற்குப் பதிலாக, நான் செய்ய
வேண்டிய அனைத்தும்
உள்ளார்ந்தமாக நான்
சக்திசாலியாக இருகின்றேன்
என்ற சிந்தனையை
பராமரிப்பதாகும். அதன்பின்
நான் உடலின்
நோய் பற்றி
பயப்பட மாட்டேன், ஆனால் எனக்கு
அதை சமாளிக்க
தைரியம் இருக்கும்.
என்னால் நோயை
தற்காலிகமான ஒன்றாக
பார்க்க முடிகிறது, மேலும் விரைவில்
நான் நலம்பெறுவதை
பார்க்கின்றேன், ஏனென்றால்
நான் உள்ளுக்குள்
சக்திவாய்ந்தவன்.
தன்னை கடவுளுடைய
கருவியாக கருதுவது
என்றால் இலேசாக
இருப்பது என்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
கடவுளின் கருவியாக
இருப்பது என்றால்
கடவுளுடைய குணங்கள்
தம்முடைய வாழ்க்கையில்
வெளிப்பட அனுமதிப்பதாகும்.
இது கடவுளுடைய
பணி நடைபெற
தான்
தயாராக இருப்பது
என்பதாகும். தன்னை
ஒரு கருவியாக
கருதுகிறவர்கள் அவரின்
மூலம் செய்யப்படும்
காரியத்தால் ஆணவம்
கொள்வது கிடையாது
அல்லது அவர்களுக்கு
சூழ்நிலைகளை கையாளுவதில்
எந்த சிரமமும்
இருப்பது இல்லை.
அவரால் அனைத்தையும்
நன்றாகவும் எளிதாகவும்
செய்ய முடியும்.
அனுபவம்:
நான் கடவுளின்
ஒரு கருவியாக
இருக்கும்போது,
நான் பொறுப்பாக
இருக்கும் போதும்
கூட என்னால்
இலேசாக இருக்க
முடிகிறது. ஒரு
கருவியாக இருப்பதால், கடவுளுடைய பணியை
என்னால் செய்ய
முடிந்ததை நான்
இயல்பாகவே கருதுகிறேன்.
நான் கடவுளுடைய
கருவியாக இருப்பதால், என்னை மென்மேலும்
அழகாக ஆக்கிக்கொள்ளும்
பொறுப்பு எனக்கு
இருக்கிறது.
ஒரு குட்டிக்கதை
மனதை வருடியது...
ஒரு கட்டுமான
எஞ்சினியர்…
13
வது… மாடியிலே வேலை
செய்து கொண்டு
இருந்தார்…
.
ஒரு முக்கியமான
வேலை…
.
கீழே ஐந்தாவது
மாடியில் வேலை
செய்து கொண்டு
இருந்த கொத்தனாருக்கு
ஒரு
முக்கியமான செய்தி
சொல்ல வேண்டும்…
.
செல் போனில்
கொத்தனாரை கூப்பிட்டார்
எஞ்சினியர்..
.
ம்ஹும்..கொத்தனார்
வேலை மும்முரத்தில்,
சித்தாளுடன் பேசிக்
கொண்ட இருந்தார்…
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க
கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்..
மேலே பார்க்கவில்லை…
.
இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை
செய்யும் இடத்தில்
இருந்து , அவரால்
என்ஜினியரை
நன்றாகப் பார்க்க
முடியும்…
.
எஞ்சினியர் என்ன
செய்வதென்று
யோசித்தார்…
.
ஒரு பத்து
ரூபாய் நோட்டை
எடுத்து,
மேலே இருந்து,கொத்தனார் அருகில்
போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த
கொத்தனார்,
அதை எடுத்து
பையில் போட்டுக்
கொண்டார்…
.
ஆனால் சற்றும்
மேல் நோக்கிப்
பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே
கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக்
கொண்டு…
.
ஒரு ஐநூறு
ரூபாயை கொத்தனார்
மேல் போட்டார்…
.
அதையும் எடுத்து
சட்டைப் பையில்
வைத்துக்கொண்டு…
கொத்தனார் மும்முரமாக
இருந்தார்…
.
எஞ்சினியர்.. பொறுமை
இழந்து
ஒரு சின்ன
கல்லை எடுத்து,
கொத்தனார் மீது
போட்டார்…
.
அது அவரது
தோள் மீது
பட்டு நல்ல
வலியோடு,
மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர்
தன்னை
அழைத்தார் என்பதை
உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித்தான்….
மேலே இருந்து
இறைவன் அவனை
அழைப்பது அவனுக்கு
புரிவதில்லை…
உலக மாயைகளில்,
சிக்கித் தவிக்கின்றான்...
இறைவன் அவனுக்கு
அருட்கொடைகளை அளிக்கின்றான்...
அப்பொழுதும் அவன்
இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...
ஆனால் ஒரு
துன்பம் நேரும்
பொழுதுதான் இறைவனை
ஏறிட்டுப் பார்க்கின்றான்.
.
புரிந்து கொள்ளுங்கள்..
கொடுப்பவர் என்றால்
வளைந்து கொடுக்கும்
தன்மை கொண்டவராக
இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து: மற்றவர்களிடமிருந்து
எதிர்பார்க்காது,
ஆனால் தன்னிடம்
உள்ள
வளங்களிலிருந்து மற்றவர்களுக்குக்
கொடுக்கக்கூடியவர்,
வளைந்து கொடுக்கும்
தன்மை கொண்டவராவார்.
இப்படிபட்டவரால் அடுத்தவரின் நற்பண்புகளை அறிந்துகொண்டு
தன்னுடைய சொந்த
நற்குணங்களை இழக்காமல்
மற்றவரின் மதிப்பு
முறையை (value system) அடையாளம் காணவும் அதற்கேற்ப சுயத்தை மாற்றிக்கொள்ளவும்
முடியும்.
அனுபவம்: நான்
கொடுப்பவராக இருக்கும்போது,
எனது மதிப்பு
முறைக்கு(value system) ஏற்ப மற்றவர்கள் மாறுவார்கள்
என்று நான்
எதிர்பார்க்கவில்லை,
ஆனால் மற்றவரின்
மதிப்பு முறைக்கு(value
system) ஏற்ப ஒரு
வழியை மிக
எளிதாக கண்டுபிடிக்க
முடிகிறது. மற்றவர்கள்
என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான்
ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் என்னால்
மற்றவர்களைப் புரிந்து
கொள்ள முடிகிறது.
எனவே யாருக்கும்
ஒருபோதும் எதிர்மறை
உணர்வு இல்லை
No comments:
Post a Comment