Breaking

Saturday, September 21, 2019

மன்னிப்பது என்பது திருத்தம் கொடுப்பதாகும்.

மன்னிப்பது என்பது திருத்தம் கொடுப்பதாகும்.

Forgiveness means correction


சிந்திக்க வேண்டிய கருத்து:  மன்னிப்பு இருக்கும்போது,  தவறின் தீங்கு மறந்துவிடும். திருத்தம் கொடுக்கப்பட வேண்டிய அளவிற்கு மட்டுமே தவறு நினைவில் உள்ளது. எனவே திருத்தம் கொடுக்கும்போது கூட எதிர்மறை உணர்வுகள் வெளிப்படுத்தப்படுவதில்லை. பயன்படுத்தப்படும் சொற்கள் மிகக் குறைவு, ஆனால் மிகவும் பயனுள்ளவை என்பதை நிரூபிக்கின்றன.

அனுபவம்: மன்னிக்கும் கலையை நான் கற்றுக் கொள்ளும்போது எதிர்மறை மற்றும் வீணான சிந்தனையின் சுமைகளிலிருந்து விடுபட முடிகிறது. எனவே தேவைப்படும்போது திருத்தம் கொடுப்பதில் ஒருபோதும் சிரமம் இல்லை. மனம் கடந்த கால மனப்பான்மையிலிருந்து விடுபட்டுள்ளது,  மேலும் கருத்துக்கள் அல்லது ஆளுமைகள் பொருந்தவில்லை என்றாலும் அது உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறது.

ஒவ்வொரு நாளும் தன்னலமற்ற ஒன்றைச் செய்வது மகிழ்ச்சியை உறுதி செய்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு தன்னலமற்ற ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, நிபந்தனையின்றி மகிழ்ச்சியைக் கொடுக்கும் திறன் இருக்கிறது. எந்த உறவுமுறை அல்லது மற்ற நபரின் ஆளுமை எதுவாக இருந்தாலும்,  இதைச் செய்யும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டவர்,  சுற்றியுள்ளவர்களுக்கு ஆதரவின் ஆதாரமாக இருக்க முடிகிறது.

அனுபவம்: மகிழ்ச்சியைக் கொடுப்பதும்,  துக்கத்தை முடிப்பதும் நான் தரக்கூடிய சிறந்த பரிசு. இதைப் பற்றி நான் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கும்போது,  எந்தவொரு வெகுமதிக்காகவும் அல்ல,  ஆனால் தன்னலமற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே எனும்போது,  அந்த செயலின் பலனை என்னால் கண்டுபிடித்து அனுபவம் செய்ய முடிகிறது. நான் எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டுள்ளேன்,  மேலும் இந்த செயலை என்னால் ரசிக்க முடிகிறது.

நல்ல பகுத்தறிவை கொண்டிருப்பவரால் உண்மையான நன்மையைக் கொண்டு வர முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: அனைவரும் இயல்பாகவே சுய மற்றும் பிறரின் நலனுக்காக செயல்படுகிறார்கள். ஆனால் நல்ல பகுத்தறிவை கொண்டிருப்பவரால் மற்றவரின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப கொடுக்க முடியும். எனவே இயற்கையாகவே செய்யப்படும் அனைத்தும் மற்றவர்களுக்கும் சுயத்திற்கும் நன்மை அளிக்கிறது.

அனுபவம்: என்னால் சரியான நபருக்கு சரியான நேரத்தில் சரியான விஷயத்தின் மூலம் நன்மை கொண்டு வர முடிந்தால்,  மற்றவர்களின்  நம்பிக்கையை என்னால் வெல்ல முடிகிறது. பதிலுக்கு நான் எதுவும் எதிர்பார்க்கவில்லை,  ஆனால் சரியான நேரத்தில் உதவி செய்வதில் திருப்தி அடைகிறேன்

இதயத்தில் சுத்தமாக இருப்பது என்றால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: தூய்மையான இதயம் உள்ளவர், தான் தொடர்பு கொள்ளும் நபர்களுக்காக எப்போதும் சிறந்ததைச் செய்ய முயற்சிப்பவர். இப்படிப்பட்ட நபர் மற்றவர்களை அவர்களை உள்ளது போலவே ஏற்றுக்கொள்வதோடு,  அவர்கள் செய்த எந்த தவறையும் புறக்கணிப்பார். மாறாக,  அவரால் சமநிலையை இழக்காமல் சரியான செயலை செய்ய முடிகிறது. எனவே அத்தகைய நபர் அவர் செய்யும் ஒவ்வொரு செயலினாலும் தனக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறார்.

அனுபவம்: எனக்கு தூய்மையான இதயம் இருக்கும்போது எனது உள்ளார்ந்த குணங்களின் அனுபவத்தை என்னால் பெற முடிகிறது. வெவ்வேறு உறவுமுறைகளின் அழகையும்,  ஒவ்வொரு உறவையும்,  ஒவ்வொரு நபரையும் தனித்துவமாக இருப்பதை என்னால் ரசிக்க முடிகிறது. இதனால் மற்றவர்கள் அவர்களின் உள் அழகோடு தொடர்பு கொள்ள முடிகிறது. எனவே அனைவரும் மகிழ்ச்சியை அனுபவம் செய்கிறார்கள்

நம் வாழ்க்கையில் நாம் எதிர்க்கொள்ளும் அனைத்தையும் மதிப்பது என்பது பணிவுதன்மையோடு இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: எளிமையான விஷயங்களை நேசிப்பது என்றால் பணிவுடன் இருப்பதாகும். வாழ்க்கை நாம் எதிர்க்கொள்ளும் அனைத்தையும் மதிப்பதற்கு இது கற்றுக்கொடுக்கிறது. அதாவது அனைத்தையும் சரியான முறையில் பாராட்டவும் மதிப்பிடவும் ஒரு திறன் உள்ளது. ஆகவே,  ஒருவர் தன்னுடைய மற்றும் பிறரின் நலனுக்காக வாழ்க்கை தாம் எதிர்க்கொள்ளும் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

அனுபவம்: நான் பணிவுடன் இருக்கும்போது,  என் உள்ளார்ந்த அமைதியில் கவனம் செலுத்த முடிகிறது,  தனிப்பட்ட நல்லுணர்வை இழக்க முடியாது. என் வாழ்க்கையில் நடக்கும் அனைத்திலிருந்தும் என்னால் வெறுமனே கற்றுக் கொள்ள முடிகிறது,  மேலும் இந்த நல்லுணர்வை அதிகமாக சேமிக்கவும் முடிகிறது. எந்தவொரு சூழ்நிலையும் வேலை செய்வதற்கு கடினம் அல்லது சாத்தியமற்றது என்றல்ல,  ஆனால் அனைத்து சவால்களையும் என்னால் எளிதாக சமாளிக்க முடிகிறது

புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தார்.

அப்போது அவரைப் பார்ப்பதற்கு ஒரு இளைஞன் வந்தான்.

வெகு தொலைவு நடந்து வந்த அவன், புத்தரைப் பார்த்த அக்கணமே கதறி அழுதான். அவன் அழுது முடிக்கும் வரை பொறுத்திருந்த புத்தர் கனிவாகக் கேட்டார்:

சகோதரா, ஏன் இப்படிக் கண்ணீர் சிந்துகிறாய்? உனக்கு ஏற்பட்ட பிரச்னையை என்னிடம் சொல்.
“”பகவானே, என் வாழ்க்கையில் நான் எல்லையற்ற துன்பங்களை அனுபவித்து வருகிறேன்.

எடுத்த எதிலும் தோல்வி. தாங்க முடியாத துயரம்.

ஆதரவுக்கென்று எனக்கு யாருமில்லை.
என் மனது மிகவும் பலவீனமாகப்
போய்விட்டது.
எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்.

புத்தர் அன்புடன் அவன் கையில் தண்ணீர்க் குவளையைக் கொடுத்தார்.

பிறகு உப்பையும் கொடுத்து விட்டுச் சொன்னார்: “”சகோதரா, இந்தச் குவளையில் உப்பிட்டுக் கலக்கி அருந்து.”

:large_blue_circle:அவன் உப்பைக் குவளையில் இட்டுக் கலக்கி அருந்திப் பார்த்தான். இரண்டு மிடறு குடிப்பதற்குள் அவன் முகம் கோணியது. மேற்கொண்டு குடிக்க முடியாமல் அப்படியே கீழே வைத்து விட்டுச் சொன்னான்:
என்னால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை பகவானே. மிகவும் கரிக்கிறது.”

புத்தர் மீண்டும் இதோ இப்போதும் அதே அளவு உப்பைத் தருகிறேன்.
இதை நீ எதிரில் இருக்கும் அதோ அந்தக் குளத்தில் கரைத்துவிடு!”

புத்தர் சொன்னபடியே அவன் அந்த உப்பை எதிரிலிருந்த குளத்தில் கரைத்தான். :
இப்போது அந்தக் குளத்து நீரைக் குடித்துப் பார்.”

உப்புக் கரைக்கப்பட்ட போதும் குளத்து நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை.
அந்த இளைஞன் போதுமான அளவு நீர் குடித்துவிட்டுக் கரைக்கு வந்தான்.

நீ சிறிய குவளையில் இருந்த நீரிலும், பிறகு இந்தக் குளத்து நீரிலும் கரைத்தது ஒரே அளவான உப்புதான்.
ஆனால் சிறிய குவளையில் தண்ணீர் கொஞ்சம் தான் இருந்தது.
அதனால் தான் கரிப்புச் சுவை அதிகமாக இருந்தது. எனவே உன்னால் தண்ணீரைக் குடிக்க முடியவில்லை.
ஆனால் இதே உப்பு குளத்து நீரில் கரைக்கப்பட்டிருந்தாலும், அந்த நீரில் உப்பின் சுவை கொஞ்சம் கூடத் தெரியவில்லை..

நம் துன்ப துயரங்கள் என்பவை உப்பைப் போலத் தான். இவை வாழ்க்கை நெடுகிலும் வந்து கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்கவே முடியாது.
ஆனால் நம்மால் நம் மனதை விசாலமாக்க முடியும்.
இப்போது உன் மனது அந்தச் சிறிய குவளையைப் போல் தான் இருக்கிறது.
அதனால் தான் வாழ்க்கைச் சிரமங்கள் உனக்கு இந்தளவு துயரமளிக்கின்றன.

நீ நிறைய அறிவும் அனுபவங்களும் பெற்று உன் மனதைப் பெரிதாக்கு.
அதை வலுப்படுத்து.
அப்போது உன் துயரங்கள் குளத்தில் கரைக்கப்பட்ட உப்பைப் போலக் காணாமல் போய்விடும்.

அந்தத் தெளிந்த நிலையில் தான் புதிய வழிகள் புலனாகும்.
அவ்வழிகளில் நீ உயர்வடைவாய்.”

கொடுப்பவர் என்றால் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவராக இருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காது,  ஆனால் தன்னிடம் உள்ள  வளங்களிலிருந்து மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடியவர்,  வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவராவார். இப்படிபட்டவரால் அடுத்தவரின்  நற்பண்புகளை அறிந்துகொண்டு தன்னுடைய சொந்த நற்குணங்களை இழக்காமல் மற்றவரின் மதிப்பு முறையை (value system) அடையாளம் காணவும் அதற்கேற்ப  சுயத்தை மாற்றிக்கொள்ளவும் முடியும்.

அனுபவம்: நான் கொடுப்பவராக இருக்கும்போது, எனது மதிப்பு முறைக்கு(value system) ஏற்ப மற்றவர்கள் மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை,  ஆனால் மற்றவரின் மதிப்பு முறைக்கு(value system) ஏற்ப ஒரு வழியை மிக எளிதாக கண்டுபிடிக்க முடிகிறது. மற்றவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,  ஆனால் என்னால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே யாருக்கும் ஒருபோதும் எதிர்மறை உணர்வு இல்லை

ஒரு நற்பண்பை பொறுப்புடன் பயன்படுத்துவது என்றால் அனைத்து நற்பண்புகளின் பயன்பாட்டிற்கும் உத்தரவாதம் அளிப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:  ஒரு மதிப்புமிக்க குடும்பத்தில் உறுப்பினர்களாக இருப்பதைப் போல் நற்பண்புகளும் ஒன்றோடு மற்றொன்று  தொடர்புடையவை. ஒரு நற்பண்பை பொறுப்புடன் பயன்படுத்த  உறுதியளித்தவர் மற்ற சம்பந்தப்பட்ட நற்பண்புகளையும்  வெளிப்படுத்துவார். அத்தகைய நபரால் அவர் செய்யும் மற்றும் பேசும் அனைத்தினதும் தரத்தையும் உயர்த்த முடியும்.

அனுபவம்: என்னுடைய சொந்த சிறந்த  நற்பண்புகளை  அடையாளம் கண்டு,  அதை அன்றாட வாழ்க்கையில் பொறுப்புடன் பயன்படுத்துவதால்,  நான் செய்யும் அனைத்திலும் வெற்றியை அனுபவம் செய்ய முடிகிறது. ஏனென்றால்,என்னிடம் இருக்கும் சிறந்தவற்றைக் கொடுப்பதில் திருப்தி இருப்பதோடு,  நான் செய்யும் அனைத்தின் தரத்தையும்  உயர்த்தியுள்ளேன்

உண்மையான நேர்மை சுயத்தைப் பற்றிய தெளிவைக் கொண்டுவருகிறது.

சிந்திக்க வேண்டிய கருத்து: நேர்மை என்பது உண்மையை பேசுவதை மட்டும் குறிக்காது. நேர்மை என்றால் தன்னிடம் தெளிவாக இருப்பது. பின்னர் அது இயல்பாகவே ஒருவரின் சொந்த திறன்களைப் பற்றிய தெளிவைக் கொண்டுவருகிறது. இந்த தெளிவான புரிதல் ஒருவருக்கு, திறனுக்கு ஏற்ப சிறந்ததைச் செய்ய உதவி செய்கிறது. இது முன்னேற்றத்திற்குரிய ஒரு உயர்ந்த படியின் அங்கீகாரத்தை அளிக்கிறது மற்றும் வாழ்க்கையின் வெவ்வேறு படிப்பினைகளிலிருந்து கற்றுக்கொள்ள பணிவை கொண்டுவருகிறது.

அனுபவம்: நான் நேர்மையாக இருக்கும்போது எனது சொந்த வரம்புகளை அறிந்து அவற்றை அன்போடு ஏற்றுக்கொள்ள முடிகிறது. இந்த ஏற்றுக்கொள்ளும் தன்மை என்னால் என்ன செய்ய முடியும் என்பதில் என்னை மும்முரமாக வைத்திருக்கிறது,  மேலும் அமைதியாக என்னை அடுத்த கட்டத்திற்கு தயாராக்குகிறது. நேரம் வரும்போது,  என்னால் அதைச் செய்ய முடிகிறது,  ஏனென்றால் நான் ஏற்கனவே அதற்குத் தயாராகிவிட்டேன். சூழ்நிலைகள் என்னிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கும்போது நான் நின்றுவிடவில்லை,  ஏனென்றால் அதற்குள் முழு தெளிவு இருக்கிறது.

No comments:

Post a Comment