ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பது அவற்றுக்கு தகுதி வாய்ந்தவர் ஆகுவதாகும்.
ஒரு உல்லாச கப்பல் கடலில் சென்ற போது அடித்த புயலினால் கப்பல் உடைந்தது.
.
அதில் இருந்த இரு ஆண்கள் மட்டுமே தப்பி நீந்தி வந்து அருகில் உள்ள ஒரு சிறிய தீவை சென்று அடைந்தனர்.
.
அந்த இருவரும் அந்தஸ்த்தில் வேறுபட்டவர்கள், ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் பணிபுரியும் சூழ்நிலையால் நண்பர்கள் ஆனவர்கள்.
.
அந்த தீவில் வெறும் புற்களும் புதர்களும் மட்டுமே இருந்தது. சாப்பிடவோ ஒதுங்க நிழலுக்கு மரம் கூட இல்லாதிருந்தது..!
.
அவர்களுக்கு என்ன செய்வது என்பதே தெரிய வில்லை. முடிவில் இருவரும் கடவுளை வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்தனர்.
.
அப்போது யாருடைய பிரார்த்தனைக்கு அதிக சக்தி இருக்கிறது பார்ப்போம் என்றும் முடிவு செய்தனர்.
.
அதன்படி அந்த தீவின் இருகரைகளிலும் தனி தனியாக தங்குவதற்கு உடன்பட்டனர். முதலில் இருவரும் உணவுக்காக பிரார்த்தனை செய்தனர்.
.
அவர்களின் பிரார்த்தனை படி வசதியானவன் இருந்த பகுதிக்கு சில பழங்கள் மிதந்து வந்தன. அதை அவன் சாப்பிட்டான் ஆனால் ஏழையோ சாப்பிட ஏதும் கிடைக்காமல் பசியோடு இருந்தான்.
.
பசியாறிய மனிதனுக்கோ போரடித்தது, தனக்கு அருகில் மனைவியாக ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வேண்டினான். ஆச்சர்யமாக அவன் வேண்டுதல் படியே அந்த தீவுக்கு அருகில் வந்த சிறிய கப்பல் உடைந்து அதில் இருந்த ஒரு அழகிய இளம் பெண் மட்டும் உயிர் தப்பி ஒரு உடைந்த பலகை உதவியுடன் அந்த தீவிற்கு வந்து சேர்ந்தாள்.
.
அவளைப் பார்த்ததும் அவள் அழகில் சொக்கி போய் அவளையே தெய்வ சாட்சியாக திருமணம் செய்து கொண்டான்.
.
தீவின் மற்றொரு பக்கம் இருந்தவன் இன்னும் பசியால் தனிமையில் இருந்தான்.
.
முதல் மனிதன் செய்த வேண்டுதல் படி நல்ல உணவுகள், துணிகள், எல்லாம் அவன் இருந்த பகுதிக்கு மட்டுமே மந்திரம் செய்தது போல கரை ஒதுங்கின.
.
ஆனால் அவன் நண்பனுக்கோ ஒன்றும் கிடைக்கவில்லை. அவன் உருக்குலைந்து போனான்.
ஆனால், புது ஜோடிகளோ வந்த பழங்கள் உணவுகளுடன் இருவரும் ஒரு வாரகாலம் உல்லாசமாக களித்தனர்.
.
இப்படியாக ஒரு வாரம் கழிந்தது.....
இறுதியாக முதல் மனிதன் தன் புது மனைவியுடன் தன் சொந்த இடத்துக்கு போவதற்கு வேண்டி ஒரு படகுக்காக வேண்டினான். அதுவும் அதிசயம் போல அடுத்த நாளே கரை ஒதுங்கியது.
.
முதல் மனிதன் தனது பிரார்த்தனையின் சக்தி கண்டு மிகுந்த மகிழ்ச்சியில், துரதிஷ்டம் மிக்க தன் நண்பனை அழைக்காமல் தன் புது மனைவியுடன் அதில் ஏறி அந்த தீவை விட்டு செல்ல ஆயத்தமானான்.
.
இது ஏதும் அறியாத அந்த இன்னுமொருவன் இன்னும் பசியாறாமல் வேதனையில் வாடினான்..?
.
எல்லாம் கிடைத்த நண்பன் நினைத்தான்,
தன் நண்பன் ஓன்றுக்கும் உதவாதவன் கடவுளின் ஆசிர்வாதம் கூட அவனுக்கு கிடைக்க வில்லை, ஒரு சிறு பிரார்த்தனையை கூட கடவுள் நிறைவேற்றி வைக்க வில்லை. ஏற்கனவே ஏழை வேறு.. அதானல், அவனை அழைத்து செல்ல இவனுக்கு இஷ்டமில்லை என்றான்
சுயநலம் பிடித்த அந்த நண்பன்..!!
படிக்கும் நமெக்கெல்லாம் கடவுள் மேல் கோபம் வருகிறது அல்லவா...!!
.
அப்போது அந்த படகு கிளம்ப தொடங்கியதும் வானத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க தொடங்கியது...!
.
ஏன் உன் நண்பனை தனியாக இந்த தீவில் விட்டு செல்கிறாய்..?
என்று அந்த குரல் கேட்டது...!
.
அதற்கு அந்த மனிதன் சொன்னான் நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன் அவர் என்னை ஆசிர்வாதித்து இது எல்லாம் எனக்கு மட்டும் கிடைக்க செய்தார்.
.
என் நண்பனின் பிரார்தனை ஓன்றுக்கும் கூட கடவுள் செவி சாய்க்கவில்லை. அவன் ஓன்று கூட பெற தகுதி இல்லாதவன் என்று சொன்னான்.
அந்த குரல் அவனிடம் மறுபடியும் பேசியது மகனே நீ நினைப்பது தவறு. நான் தான் கடவுள்...!!
.
உன்னை உயிராக நேசிக்கும் உன் நண்பன் பிரார்த்தனையில் ஒன்றே ஓன்று மட்டும் கேட்டான். நான் அந்த ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றி வைத்தேன்.
.
அது மட்டும் அவன் கேட்கவில்லை என்றால் உனக்கு எந்த வித ஆசிர்வாதமும் பலனும் கிடைத்து இருக்காது.
.
அந்த மனிதன் என்ன கேட்டான் பிரார்த்தனையில்? அவனுக்கு நான் ஏதாவது கடமை பட்டு இருக்கிறேனா என்றான்..?
.
அந்த குரல் மேலும்,
உன் நண்பன் பிரார்த்தனையில் என் நண்பன் மிகவும் வசதியானவன், நல்லவன்,
வாழ்க்கையில் சுகம் மட்டுமே அனுபவித்து பழகியவன், அவன் கஷ்டமே அறியாதவன். ஆகவே, என் பிரார்த்தனையெல்லாம் அவன் வேண்டுவதை மட்டும் நிறைவேற்றுங்கள்...
.
அது போதும், நான் ஏற்கனவே ஏழை தான், இதுமாதிரி சூழ்நிலைகள் எனக்கு புதியதல்ல....
ஆகவே எனக்கென்று கேட்க எதுவும் இல்லை என்று தான் வேண்டினான்.
.
அதை கேட்ட அந்த சுயநலம் பிடித்த நண்பன் வெட்கி, மனந் திருந்தி தன்னலமற்ற தன் நண்பனை தேடி ஓடினான்..!!
.
கதையின் நீதி:
நம்முடைய பிரார்த்தனைகளால் மட்டுமே நமக்கு எல்லாம் கிடைத்து விடுவதில்லை.
அதற்கு மற்றவர்களின் வேண்டுதல்களும் உதவி புரிகின்றன என்பதை மறந்து விட வேண்டாம். நம்மை நேசிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைத்து விட வேண்டாம்
பூரணத்துவத்தை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் தடைகளிலிருந்து கற்றுக்கொள்கின்றார்.
சிந்திக்க வேண்டிய கருத்து: நோக்கம் எந்த அளவிற்கு உயர்ந்ததோ, அந்த அளவிற்கு ஒருவரின் வாழ்க்கையில் வரும் தடைகளும் அதிகமாக இருக்கும். ஒரு சரியான சிலை ஒரு பெரிய அளவிற்கு செதுக்கபடுவதைப் போலவே, ஒவ்வொரு தடையும் சில அல்லது பிற குறைபாடுகளை உள்ளிருந்து அகற்ற வருகிறது. இந்த சிறிய இரகசியத்தை புரிந்து கொண்ட ஒருவரால், ஒவ்வொரு தடையையும் வளர்ச்சிக்கு ஒரு அழகான கற்றலாகவும், சிறந்த குணங்களை உள்ளிருந்து வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முடிகிறது.
அனுபவம்: எனது சொந்த உள்ளார்ந்த பூரணத்துவத்தை வெளிக்கொணர நான் கடமைப்பட்டுள்ளபோது, தற்காலிக சூழ்நிலைகளால் நான் ஒருபோதும் தடுக்கப்படுவதில்லை. நான் நம்பிக்கையுடன் நகர்கிறேன், எனக்குள் மறைந்திருக்கும் திறனை அறிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்கிறேன். நான் எப்போதும் தேடும் முழுமையை என்னால் நெருங்கி வர முடிகிறது
மரியாதை பெறுவதற்கான சிறந்த வழி சுயத்திற்கு மரியாதை கொடுப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: சுற்றியுள்ளவர்களிடமிருந்து மரியாதை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கிறது. தங்களின் நல்வாழ்வு உணர்வுக்காக மற்றவர்களை முற்றிலும் நம்பியிருப்பவர் சூழ்நிலைகளை எதிர்த்து செயல்படுபவராக இருக்கிறார், அது மிகவும் முக்கியத்துவம் இல்லாத ஒன்றாக இருந்தாலும் சரி. மறுபுறம், சுயத்திற்கு மரியாதை கொடுக்கக்கூடியவர் மற்றவர்களுக்கும் மரியாதை அளிக்கிறார், அதனால் தன்னை தான் மதிக்கிறார்.
அனுபவம்: எனது சொந்த சிறப்புகளை என்னால் காண முடிந்தால், என்னை நானே மதிக்க முடிகிறது. என் உள் மனநிலைக்கு நான் வெளிப்புற மூலங்களை சார்ந்து இல்லை. அனைத்து வெளிப்புற தாக்கங்களிலிருந்தும் நான் விடுபட்டுள்ளேன், என்னைச் சுற்றியுள்ளவர்களை செல்வாக்கின் மூலமாக மாற முடிகிறது. நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நான் தொடர்ந்து எனது சொந்த உள் நிலையை வளப்படுத்துகிறேன்
ஆசீர்வாதங்களைப் பெறுவது என்பது அவற்றுக்கு தகுதி வாய்ந்தவர் ஆகுவதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: சில சமயங்களில் கடவுளிடமிருந்து அல்லது அதிக சக்திவாய்ந்தவராக கருதப்படும் ஒருவரிடமிருந்து ஆசீர்வாதம் பெற ஆசை இருக்கிறது. ஆனால் உண்மையிலேயே மற்றவரின் அன்பு, மரியாதை மற்றும் ஆசீர்வாதங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அதற்கு தகுதியுடையவராக இருக்க முயற்சிக்க முடியும். எனவே அவர் தொடர்ந்து அவர் செய்யும் செயல்களில் சிறப்பாகவும் இருக்க முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் அனைவரின் ஆசீர்வாதங்களுக்கும் தகுதியானவர் ஆகிறார்.
அனுபவம்: நான் தொடர்ந்து என்னை மென்மேலும் தகுதியுள்ளவனாக மாற்றிக்கொள்ளும் போது, நான் தொடர்பு கொள்ளும் அனைவரிடமிருந்தும் அன்பு, நம்பிக்கை மற்றும் ஆசீர்வாதங்களை இயல்பாகவே வெல்வேன். நான் எதைச் செய்தாலும் அதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன், கடவுளின் ஆசீர்வாதங்கள் என்னுடன் இருப்பதை அறிவேன், ஏனென்றால் நான் முயற்சி செய்கிறேன். எனக்கு எந்த பயமும் பாதுகாப்பற்ற தன்மையும் இல்லை, ஆனால் நான் செய்ய வேண்டியதை நம்பிக்கையுடன் செய்கின்றேன்.
நேர்மறைதன்மை:
கேள்விகளிலிருந்து விடுபட்டிருப்பது என்பது பறப்பதற்கான ஆற்றலை கொண்டுவருகின்றது.
சிந்திக்க வேண்டிய கருத்து:
நாம் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, தேவையற்ற கேள்விகளை நம்முடைய மனதில் உருவாக்கும் போக்கு நம்மிடம் உள்ளது. இவ்வீணான எண்ணங்கள் நம்முடைய மனதை எதிர்மறைதன்மையால் நிரப்பி, நம்முடைய சக்தியை நாம் இழக்குமாறு செய்கின்றது. அந்நேரத்தில், இவ்வித எண்ணங்களை கொண்டிருப்பது இயற்கையானது என்று எண்ணி,இவ்விதமான கருத்துகளில் நாம் சிக்கிக்கொள்கின்றோம். இதனால் ஆக்கபூர்வமான எண்ணங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை.
செயல்முறை:
நான் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கும்போது, “ஏன்” அவ்வாறு நடந்தது என்பதில் நான் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதற்கு பதிலாக பறப்பதற்கான முயற்சியை செய்ய வேண்டும். என்னை வலுப்படுத்திக்கொள்ளும் வழியை கண்டுபிடிப்பது அவசியமாகும். அதனால் நான் சூழ்நிலையை விட வலிமையுடைவர் ஆகுகின்றேன்;அதனால் என்னால் சூழ்நிலைக்கு மேலே பறக்க முடியும். அதன்பின் சூழ்நிலை சிறிதாக தென்படுவதுடன் என்னால் சுலபமாக வெற்றிகொள்ள முடியும்.
வீணான சிந்தனையை முடிப்பதற்கான ஒரு வழியானது ஒர் தீர்வைக் காண்பதாகும்.
சுதந்திரமாக இருப்பது என்பது பொருட்களின் அடிமைத்தனத்திலிருந்து கூட விடுப்பட்டிருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய கருத்து: ஒரு பணியில் வெற்றிபெற ஒரு குறிப்பிட்ட விஷயத்தை சார்ந்து இருப்பவர் அந்த விஷயத்தின் அடிமைத்தனத்தின் கீழ் இருக்கிறார். அத்தகைய நபரால் தனது முழு திறனையும் முயற்சியில் ஈடுப்படுத்த முடியாது, ஏனெனில் அவர் எப்போதும் இல்லாததைப் பற்றி சிந்திக்கிறார். மறுபுறம், கையில் எதுவும் கிடைக்காத போதும் பணியைச் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிப்பவர் புதிய ஆதாரங்களைக் கண்டுபிடிப்பவர். பின்னர் அவர் இந்த வளங்களை பணியை நிறைவேற்ற பயன்படுத்த முடியும்.
அனுபவம்: இல்லாததைப் பற்றி சிந்திப்பதை விட என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நான் அதிகம் சிந்திக்கும்போது, என்னிடம் இருப்பதில் திருப்தி அடைய முடிகிறது. எனது சொந்த நலனுக்காகவும் மற்றவர்களின் நலனுக்காகவும் நான் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் என் வாழ்க்கையில் பாராட்ட முடிகிறது. ஆசைகளில் மட்டுமே சிக்கிக் கொள்ளாமல் நான் சாதிக்க விரும்புவதற்காக வேலை செய்ய முடிகிறது.
No comments:
Post a Comment