திருப்தி ஒருவரை நற்குணங்கள் உடையவராக ஆக்குகின்றது.
தன்னை கடவுளுடைய
கருவியாக கருதுவது
என்றால் இலேசாக
இருப்பது என்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
கடவுளின் கருவியாக
இருப்பது என்றால்
கடவுளுடைய குணங்கள்
தம்முடைய வாழ்க்கையில்
வெளிப்பட அனுமதிப்பதாகும்.
இது கடவுளுடைய
பணி நடைபெற
தான்
தயாராக இருப்பது
என்பதாகும். தன்னை
ஒரு கருவியாக
கருதுகிறவர்கள் அவரின்
மூலம் செய்யப்படும்
காரியத்தால் ஆணவம்
கொள்வது கிடையாது
அல்லது அவர்களுக்கு
சூழ்நிலைகளை கையாளுவதில்
எந்த சிரமமும்
இருப்பது இல்லை.
அவரால் அனைத்தையும்
நன்றாகவும் எளிதாகவும்
செய்ய முடியும்.
அனுபவம்:
நான் கடவுளின்
ஒரு கருவியாக
இருக்கும்போது,
நான் பொறுப்பாக
இருக்கும் போதும்
கூட என்னால்
இலேசாக இருக்க
முடிகிறது. ஒரு
கருவியாக இருப்பதால், கடவுளுடைய பணியை
என்னால் செய்ய
முடிந்ததை நான்
இயல்பாகவே கருதுகிறேன்.
நான் கடவுளுடைய
கருவியாக இருப்பதால், என்னை மென்மேலும்
அழகாக ஆக்கிக்கொள்ளும்
பொறுப்பு எனக்கு
இருக்கிறது.
உண்மையான ஆன்மீகம்
என்பது ஒருவரை
நடைமுறைக்கு உரியவராக
ஆக்குகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
பொதுவாக ஆன்மீகம்
என்பது சாதாரண
தினசரி வாழ்க்கையிலிருந்து
தனித்து வைக்கப்பட
வேண்டிய ஒன்று
என்று கருதப்படுகிறது.
ஆனால் உண்மையான
ஆன்மீக வாழ்க்கை
என்பது மிகவும்
நடைமுறைக்குரியது. ஆன்மீக
சக்தியால் தன்னை
நிரப்பிகொள்ள கூடியவர்,
தன்னுடைய நடைமுறை
வாழ்க்கையில் சிறந்து
விளங்குவதற்கு இந்த
வல்லமையை பயன்படுத்த
முடியும்.
அனுபவம்:
என்னால் உள்ளார்ந்த
அழகை அறிந்து
கொண்டு இந்த
ஆன்மீக அம்சத்தோடு
தொடர்பு கொள்ள
எனக்கு நான்
நேரம் கொடுக்கும்போது, நான் அனைத்து
சூழ்நிலைகளின் குழப்பத்திற்கு
அப்பால் சக்திவாய்ந்தவராக
இருக்க முடிகின்றது.
என்னால் உள்ளுக்குள்
சென்று மகத்தான
சக்தியை கண்டுபிடித்து
நடைமுறை சூழ்நிலைகளில்
அதை பயன்படுத்த
முடிகின்றது. எனவே
நான் நடைமுறை
சூழ்நிலைகளில் வெற்றிகரமாக
இருப்பதைக் காண்கிறேன்
திருப்தி ஒருவரை
நற்குணங்கள் உடையவராக
ஆக்குகின்றது.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
திருப்தியாக இருப்பவர்
சுயநலத்திலிருந்து விடுபட்டிருக்கின்றார், இருந்தபோதிலும் சுயத்தை
உள்ளார்ந்த பொக்கிஷங்களால்
நிரப்புவதில் அக்கறையுள்ளவராக
இருக்கின்றார். இத்தகைய
நபர் அவரது
பொக்கிஷங்களால் எப்பொழுதும்
நிரம்பியவராக இருப்பதை
காண்கின்றார். எனவே
அவரது எண்ணங்கள்,
வார்த்தைகள் மற்றும்
செயல்கள் எப்போதும்
அவரை சுற்றயிருப்பவர்களுக்கு பல நன்மைகளை
கொண்டுவருகின்றன.
செயல்முறை:
நான் எப்போதும்
திருப்தியுடன் இருக்கும்போது,
நான்
எப்போதுமே வெற்றியுடன்
இருப்பதாக அனுபவம்
செய்கின்றேன். அனைத்து
சூழ்நிலைகளிலிருந்தும் கற்றுக்
கொள்வதற்கும், என்
அனுபவங்களை பயன்படுத்தி
முன்னோக்கி நகர்த்துவதற்கும்
எனக்கு சுலபமாக
இருக்கிறது. நான்
கொடுப்பவராகவும் ஆகின்றேன்.
இதனால்,
என்னைச் சுற்றி
உள்ளவர்களுடைய அன்பும்
நல்லாசிகளும் எனக்கு
கிடைத்துள்ளன, மேலும்
என்னால் தொடர்ந்து
முன்னேற்றத்தை அனுபவிக்க
முடிகிறது.
உள்ளுக்குள் சுத்தமாகவும்
தெளிவாகவும் இருக்கும்
ஒருவர் மற்றவர்களுக்கு
கண்ணாடியாக மாறிவருகிறார்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
புரிந்துணர்வுடன் ஒரு
மாற்றத்தை கொண்டுவரும்
திறனைக் கொண்டிருக்கும்போது,
அத்துடன் கூடவே
உள்ளுக்குள் தெளிவையும்
சுத்தத்தையும் கொண்டுவருவதற்கான
திறனும் இருக்கிறது.
அத்தகைய ஒரு
நபர் இயல்பாகவே
மற்றவர்கள் தங்களுடைய
சொந்த பரிபூரணத்தைக்
காண ஒரு
சுத்தமான கண்ணாடியாக
மாறிவிடுகிறார். அவர்
அவரை சுற்றியிருப்பவர்களுக்கு அவர்கள் உள்ளிருக்கும்
சிறந்தவற்றை வெளிக்கொண்டு
வர ஒர்
உத்வேகம் ஆகின்றார்.
செயல்முறை:
என் வாழ்க்கையின்
ஒவ்வொரு தருணமும், எப்போதும் என்னை
மாற்றிக்கொள்வதற்கு என்னால்
முடிந்தளவு முயற்சி
மேற்கொள்ளும் போது, என் உள்ளார்ந்த
குணங்களுடன் என்னால்
தொடர்பு கொள்ள
முடிகிறது. என்
உள்ளார்ந்த பூரணத்தை
அனுபவிக்கும் மகிழ்ச்சி
எனக்கு உண்டு, இது இயற்கையாகவே
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில்
ஒரு நல்ல
பாதிப்பை உண்டாக்குகிறது
எதிர்மறைதன்மையுடன் அடையாளம்
காணப்படுவதிலிருந்து விடுபட்டிருப்பது
என்பது எப்போதும்
லேசாக இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
தன்னிடமிருக்கும் எதிர்மறை
குணாதிசயங்களுடன் தன்னை
அடையாளம் காணும்
ஒருவர் எப்போதும்
அதைப் பற்றி
சிந்திக்கிறார். அவரது
அனைத்து செயலிலும்
பேச்சிலும் இந்த
எதிர்மறையின் சுவடு
உள்ளது. கடந்து
செல்லும் ஒவ்வொரு
நாளிலும் இந்த
எதிர்மறை தன்மையின்
அடையாளம் வலுபெருவதால்
அவரால் இந்த
எதிர்மறையிலிருந்து விடுபட
முடியாதுள்ளது. சிறிதுசிறிதாக
மற்றவர்களும் அதே
வழியில் அவரை
அடையாளம் காண்கிறார்கள்.
செயல்முறை:
என்னுடைய எதிர்மறை
குணாதிசயங்களுடன் என்னை
அடையாளம் காண்பதிலிருந்து
நான் விடுபட்டிருக்கும்போது, என்னால் தொடர்ந்து லேசாக
இருக்க முடிகின்றது.
சூழ்நிலைகள் அல்லது
என் எதிர்மறையைத்
தூண்டிவிடும் நபர்கள்
இருக்கலாம்,
ஆனால் என்
உள்ளார்ந்த நிலைப்பாட்டை
என்னால் பராமரிக்க
முடிகின்றது. ஏனென்றால்
என்னுடைய எதிர்மறைதன்மையுடன்
என் அடையாளத்தை
என்னால் முடிக்க
முடிந்தது.
ஒரு தலைவராக
இருப்பது என்பது
தான் ஒரு
முன் உதாரணமாக
இருந்து வழிநடத்துவதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
எது சரி
எது சரியில்லை
என்பது அனைவருக்கும்
தெரியும். ஆனால்,
சரியானது எதுவாக
இருந்தாலும், அதன்படி
வாழும் ஒருவர்
அவருடைய வார்த்தைகள்
மற்றும் செயல்களில்
அந்த சரியானவற்றை
காண்பிப்பவர்,
மற்றவர்களை ஊக்குவித்து
அவர்கள் மாறுவதற்கு
ஊக்கமளிகின்றார். பிறகு
மற்றவர்களை ஊக்குவிக்கும்
வார்த்தைகளை அதிகம்
பேச வேண்டிய
அவசியமில்லை.
செயல்முறை:
என்னுடைய ஒவ்வொரு
நடவடிக்கையும் தரமானதாக
இருக்கும்போது,
வழிகாட்டுதலுக்காகவும் ஆதரவிற்காகவும்
மக்கள் என்னிடம்
வருகிறார்கள். மக்கள்
என்னைப் பார்த்து
என்னிடமிருந்து தூண்டுதலடையும்போது
என் வார்த்தைகளையும்
செயல்களையும் கவனித்துக்
கொள்ள என்னால்
முடிகின்றது,
அதனால் நான்
பேசும் வார்த்தைகளும்
செய்யும் செயல்களும்
எனக்கும் மற்றவர்களுக்கும்
நன்மை அளிக்கின்றன
சிறந்த ஒப்பீடு
என்பது என்னோடு
என்னை ஒப்பிடுவதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
தன்னைத்தானே ஒப்பிட்டுப்
பார்க்கும் ஒருவர், அவர் எப்படி
முன்னேற்ற முடியும்
அல்லது அவர்
எப்படி முன்னேற்றமடைந்திருக்கிறார் என்பதைப் பார்க்கிறார்.
இப்படிபட்ட ஒருவர்
அவரது சொந்த
வாழ்க்கையில் தொடர்ந்து
முன்னேற்றம் அடைந்து
வருகிறார். மாறாக, தன்னை மற்றவர்களுடன்
ஒப்பிட்டுப் பார்க்கும்
ஒருவர்,
தொடர்ந்து சாக்கு
போக்குகளை கண்டுபிடிப்பதோடு, ஒரு மாற்றத்தை
கொண்டு வருவதற்கு
கிடைத்த வாய்ப்புகளை
விட்டு விலகியிருக்கிறார்.
செயல்முறை:
நான் சாக்கு
போக்குகள் கூறுவதிலிருந்தும்
மற்றவர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தும்
விடுபட்டு,
சுதந்திரமாக இருக்கும்போது,
மிகவும் சவால்மிக்க
சூழ்நிலைகளில் கூட
என்னால் லேசாக
இருக்க முடிகின்றது.
நான் என்
சொந்த அல்லது
மற்றவர்களுடைய தவறுகளில்
சிக்கிக்கொள்ளவில்லை. ஆனால்,
என் அனுபவங்கள்
என்ற புதையலில்
என்னால் தொடர்ந்து
சேர்க்க முடிகிறது.
சந்திக்கும் ஒவ்வொரு
புதிய சவாலுடனும்
நான் மென்மேலும்
செல்வந்தர் ஆகின்றேன்.
இலேசானதன்மை: வீணான
வார்த்தைகளிலிருந்து விடுபட்டு
இருப்பவரே லேசாக
இருப்பவராவார்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
சில சமயங்களில்
ஒன்றை விளக்குவதற்கு
ஒரு சில
வார்த்தைகளே தேவைப்படும்போது,
நாம் அவற்றை
பற்றி தொடர்ந்து
பேசுவதோடு அதை
பற்றி நீண்ட
நேரம் விவரிக்கின்றோம்.
நாம் உண்மையாகவே
காரியங்களை தெளிவாகுகின்றோம்
என சிந்தித்து,
தேவைக்கு அதிகமான
வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம்.
இது தேவையானது
அல்லது மற்றவர்கள்
புரிந்துகொள்ள மாட்டார்கள்
என நமக்கு
நாமே நியப்படுத்திக்
கொள்கின்றோம். இந்த
வார்த்தைகள் சில
சமயங்களில் அடுத்தவரை
தொந்தரவு செய்வதோடு
நமது உறவுமுறைகளையும்
பாழாக்கிவிடுகிறது.
செயல்முறை:
நாம் பேசக்கூடிய
வார்த்தைகளை தொடர்ந்து
கவனிப்பது அவசியமாகும்.
நாம் உண்மையாகவே
தேவைக்கு அதிகமான
வார்த்தைகளை பயன்படுத்துகின்றோமா
என நாம்
சோதிப்பது அவசியமாகும்.
குறைவாகவும், மெதுவாகவும்
இனிமையாகவும் பேசவும்
என்ற ஸ்லோகணை
நாம் நினைவுபடுத்திக்
கொள்ளும்போது நம்முடைய
வார்த்தைகள் மற்றவர்களை
ஒருபோதும் தொந்தரவு
செய்யாது. அதன்பின்
நம்முடைய சொந்த
மற்றும் மற்றவர்களுடைய
லேசானதன்மையை நம்மால்
தக்கவைத்துக்கொள்ள முடியும்
பொக்கிஷங்கள்: அகத்தில்
ஆரோக்கியமாக இருப்பதென்பது
அனைத்து பொக்கிஷங்களையும்
சிறப்பான முறையில்
பயன்படுத்துவதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
ஒரு ஆரோக்கியமான
புத்தி எப்போதும்
சரியான பாதையை
காண்பிப்பதில் ஒரு
தாய் போல்
செயல்படுகிறது. அகத்தில்
வலிமை வாய்ந்தவராக
இருக்கும் ஒருவருக்கு
அவர் மனதை
அன்போடு வழிநடத்தி
சரியான பாதையில்
அழைத்து செல்லும்
இயற்கையான திறனும்
உள்ளது. இத்தகைய
ஆரோக்கியமான மனநிலை
இயற்கையாக கிடைக்கும்
அனைத்தையும் அங்கீகரிப்பதொடு
அவற்றை சரியாக
பயன்படுத்தவும் ஊக்கமளிக்கிறது.
செயல்முறை:
நான் என்னுடைய
மனதை அன்புடன்
சரியான திசையில்
செலுத்த கற்றுக்கொண்டவுடன்
என் மனதை
மீண்டும் சரியான
சிந்தனைக்கு கொண்டு
வருவதற்கு நான்
சிரமப்படவில்லை. ஏனெனில்
என் மனம்
முற்றிலும் சுலபமாகவும்
இயல்பாகவும் முழு
கட்டுப்பாட்டின் கீழ்
உள்ளது. மேலும்
நான் அதை
கட்டுப்படுத்தவோ அல்லது
கட்டாயப்படுத்தி சிந்திக்கவோ
அல்லது குறிப்பிட்ட
வழியில் சித்திக்காமல்
இருக்கசெய்ய தேவையில்லை
வெற்றி: இதயபூர்வமாக
அன்புடன் சேவைசெய்வது
வெற்றிக்கு உத்தரவாதம்
அளிப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
நான் மற்றவர்களுக்கு
உதவி செய்ய
வேண்டி இருக்கும்போது,
சில நேரங்களில்
நான் கட்டாயத்தின்பேரில்
அதனை செய்வதை
காண்கின்றேன்.அதை
செய்வதில் எனக்கு
எந்த ஆர்வமும்
இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சூழ்நிலைகள்
அல்லது மனிதர்கள்
அதை செய்ய
என்னை கட்டாயப்படுத்துவதாகதெரிகின்றது. அதன்
பின்னர் நான்
செய்வது எனக்கு
சந்தோஷமளிக்கவில்லை மேலும்
மற்றவர்களுக்கோ அல்லது
எனக்கோ அது
நன்மையளிக்காமல் இருப்பதை
காண்கின்றேன்.
செயல்முறை: நான்
மக்களுக்கு உதவி
செய்யும் போது
அதன் மூலம்
மக்கள் என்ன
பயன் அடைகிறார்கள்
என பார்ப்பதற்குநான்
முயற்சி செய்ய
வேண்டும். இந்த உணர்வுபூர்வமான முயற்சியால்
என்னால் மற்றவர்களுக்கு
அன்புடன் உதவி
செய்ய முடிவதுடன்
நான் பாரமான
உணர்வு இல்லாமல்
இருக்கின்றேன். இதன்
காரணமாக என்னுடைய
செயல்கள் மேலும்
அதிக பயனுள்ள
வகையில் இருப்பதை
காண்கின்றேன்.
புரிந்துணர்வு:
எதிர்மறை எண்ணங்களிலிருந்து
விடுபட்டு இருப்பதென்றால்
தண்டனையிலிருந்து விடுபட்டிருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
எதிர்மறையான சூழ்நிலை
இருக்கும்பொழுதெல்லாம் நான்
மிகவும் எதிர்மறையாக
நடந்துகொள்ள முனைகின்றேன்.
அதிகமான எதிர்மறை
எண்ணங்களைகொண்டிருப்பதுடன் அந்த
நேரத்தில் அதிகமான
சிரமத்தையும் அனுபவிக்கின்றேன்.
அதன் பின்னர்
சூழ்நிலையை குற்றம்சாட்டுவதோடுஅதன்காரணமாக தண்டைனையை
அனுபவிப்பதாக உணர்கின்றேன்.
செயல்முறை: என்னுடைய
சொந்த எதிர்மறை
எண்ணங்கள் மூலம்
நான் மிக
பெரிய தண்டனையை
அனுபவிக்கின்றேன் என்ற
உண்மையை நான்
புரிந்துகொள்வது அவசியமாகும்.
எந்த அளவிற்கு
இவ்விதமான எதிர்மறை
எண்ணங்களிலிருந்து நான்
என்னை விடுவித்து
கொள்கின்றேனோ அந்த
அளவிற்கு என்னால்
என்னை எவ்வித
தண்டனையிலிருந்தும் விடுவித்துக்கொள்ள
முடியும்
எண்ணங்கள்: எண்ணங்கள்
என்ற பொக்கிஷமே
மிகப்பெரிய பொக்கிஷம்.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
நான் எதிர்மறையான
அல்லது வீணானவற்றை
சிந்திக்கும்போது என்னுடைய
எண்ணங்கள் அதிவேகமாக
இருக்கின்றன. இத்தகைய
எண்ணங்கள் சக்தி
வாய்ந்ததாக இல்லை.
மறுபுறம் என்
எண்ணங்கள் நேர்மறையாக
இருக்கும் போது, சில சக்தி
வாய்ந்த எண்ணங்களே
இருக்கின்றன. இத்தகைய
எண்ணங்கள் ஒரு
ஆக்கபூர்வமான தாக்கத்தை
உருவாக்குகின்றன.
செயல்முறை: இன்று
நான் என்
எண்ணங்களை சோதனை
செய்வேன். இன்று
நான் ஒரு
அழகான எண்ணத்தை
உருவாக்கி நாள்
முழுவதும் அதை
பற்றி சிந்திப்பேன்.
“என்னுடைய வாழ்க்கையில்
ஒர் தாக்கம்
ஏற்படுத்த எனக்கு
சக்தியுள்ளது.நான்
ஒரு மாஸ்டர்”, என்பது ஒரு
எளிமையான நேர்மறையான
எண்ணம். இது
என்னுடைய எண்ணகளின்
வேகத்தை குறைத்து
என்னை சக்தி
வாய்ந்தவர் ஆக்குகின்றது
மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக இருக்கும்போது
படைப்பாற்றல் இருக்கிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து:
சவால்மிக்க சூழ்நிலைகள்
நம் வழியில்
குறுக்கிடும்போது,ஒரேமாதிரியான
வழியில் சிந்தித்து,
பிரச்சனையை வெற்றிகொள்ள
முயற்சிக்கும் போக்கு
நம்மிடம் இருக்கிறது.
அதாவது, தீர்வை
தேடி, மனம்
மீண்டும் மீண்டும்
அதனையே சிந்திக்கிறது.
இது நீண்ட
நேரம் நீடிக்கும்போது,
தீர்வு கண்டுபிடிப்பதற்கு
மிகவும் கடினமாகிறது.
அதனால் அங்கு
சந்தோஷம் அல்லது
மன நிம்மதி
இருப்பதில்லை.
செயல்முறை:
மகிழ்ச்சி, மனதை
தொட்டு உள்ளிருக்கும்
படைப்பாற்றலை வெளிகொண்டுவர
உதவுகிறது. நான்
மகிழ்ச்சியாக இருக்கும்போது,
என்னால் ஒவ்வொரு
நொடியையும் அனுபவித்து
சிறப்பான முறையில்
பயன்படுத்த முடிகிறது.
மகிழ்ச்சியாக இருக்கும்
ஒருவர் படைப்பாற்றலை
வெளிப்படுத்த சரியான
சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க
மாட்டார். ஆனால்
ஒவ்வொரு நொடியிலும்
படைப்பாற்றலை கண்டுபிடிப்பார்.
இவ்வாறு நான்
எதையாவது புதிதாக,
தனித்துவமானதாக மற்றும்
வித்தியாசமாக செய்யும்போது,
நான் மிகவும்
சிறப்பாக செய்துள்ளேன்
என்ற திருப்தியுடனும்
இருப்பேன்
அகநோக்கு
ஒவ்வொரு செயலிலும்
கவனம் செலுத்துவது
என்பது கதாநாயகனாக
இருப்பதாகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
கதாநாயகன் என்ற
பாத்திரம் அனைவரையும்
கவருகின்றது. மக்களின்
புகழை பெற
அனைவரும் ஒரு
பதவியில் இருப்பதற்கு
விரும்புகிறார்கள். மக்கள்
நம்மை புகழும்போது,
நாம் நன்றாக
உணர்கிறோம் - அவர்கள்
புகழாதபோது நாம்
ஏமாற்றமடைகின்றோம். நம்மைப்பற்றி
நாம் நன்றாக
உணர, நாம்
மற்றவர்களை சார்ந்து
இருக்கிறோம். ஆனால்
மற்றவர்களுடைய கருத்துக்கள்
நம்பக்கூடியதாக இல்லை.
செயல்முறை
நான் செய்யும்
அனைத்திலும் கவனம்
செலுத்தும்போது, நான்
ஒரு கதாநாயகன்
ஆகின்றேன். என்னுடைய
வார்த்தைகள் அல்லது
செயல்கள் எதுவுமே
வீணானவையாகவோ அல்லது
சாதாரணமாகவோ இல்லாதிருப்பதை
நான் உறுதி
செய்வது அவசியம்.
மேற்கொண்டு, நான்
செய்யும் அனைத்தையும்
சிறப்பாக செய்ய
முயற்சிப்பேன். இவ்வாறு,
நான் கவனம்
செலுத்தும்போது,என்னால்
அனைத்து நேரங்களிலும்
என்னுடைய சிறப்பான
திறமைகளை கொடுக்க
முடியும். நான்
என்ன செய்கின்றேன்
என்பதைக் காட்டிலும்,
நான் எவ்வளவு
சிறப்பாக செய்கின்றேன்
என்பதன் முக்கியத்துவத்தை
அறிந்துகொள்வதால் நான்
திருப்தியடைவதை உணர்வேன்.
பொறுமை
திடமான நோக்கத்தோடு,பொறுமையும் சேரும்போது,
வெற்றி பெறப்படுகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து
சில சமயங்களில்,
நம்முடைய பொறுமை
குறைவால் ஒரு
காரியத்தை முடிக்கும்
முன்பே நாம்
அதை கை
விட்டுவிடுகின்றோம். மேற்கொண்டு,
ஏன் இவ்வாறு
நடந்தது என்று
நாம் கேள்வி
கேட்பதோடு, நம்மையே
தோல்வியாகக் கருத
ஆரம்பிக்கின்றோம்.
செயல்முறை
ஒவ்வொரு முறையும்
நான் ஒரு
புதிய காரியத்தை
தொடங்கும்போது, திடமான
நோக்கத்துடன் பொறுமையையும்
கிரகிப்பது அவசியம்.
பொறுமை, என்னுடைய
முயற்சிக்கான பலனை
நான் அடையும்
வரை காத்திருக்க
எனக்கு உதவி
செய்கிறது. நான்
பொறுமையாக, அவசரப்படாமல்
இருந்தால், என்னுடைய
முயற்சியின் முடிவு
உடனடியாக புலப்படவில்லை
என்றாலும்கூட, நான்
அக்காரியத்தை கைவிட்டு
விடமாட்டேன். அதன்பின்
நான் தோல்வியை
ஒருபொழுதும் அனுபவம்
செய்ய மாட்டேன்;
தொடர்ந்து வெற்றியை
நோக்கி மட்டுமே
பயணிப்பேன்.
சுதந்திரம்
யாருடைய மனம்
சுதந்திரமாக இருக்கிறதோ,
அவர்தான் மற்றவர்களுக்கு
நன்மையை கொண்டுவர
முடியும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
பெரும்பாலும், சுயத்திற்கு
போதுமான நேரம்
இல்லாதிருப்பதாக நாம்
உணர்கின்றோம். ஆனால்,
அதிகமாக நம்மைப்பற்றியே
நாம் சிந்திக்கும்போது,
சிறிதளவு நேரமே
மற்றவர்களுக்காக நம்மிடம்
உள்ளது. நம்மால்,
நமக்கும் மற்றவர்களுக்கும்
நன்மை கொண்டுவரமுடியாமலேயே
நாட்கள் கடந்துவிடுகிறது.
செயல்முறை
எந்நேரமும் என்னைப்பற்றியே
சிந்திப்பதற்கு பதிலாக,
மற்றவர்களுக்கு உதவுவதால்,
எனக்கு நானே
இயற்கையாகவே உதவி
செய்துகொள்கின்றேன் என்பதை
நான் உணர்ந்துகொள்வது
அவசியம். இதை
செய்வதற்கு, முதலில்
என்னுடைய சொந்த
மனதில் நான்
உருவாக்கிய சங்கிலிகளிலிருந்து
என்னை நான்
விடுவித்துக்கொள்வது அவசியம்.
நான் சுதந்திரம்
பெற்றவுடன், என்னால்
முன்னேறிச் சென்று,
என்னை சுற்றி
உள்ளவர்களுக்கும் என்னால்
நன்மையை கொண்டுவர
முடியும்.
லேசானதன்மை
பிரச்சனைகளை விளையாட்டாக
கருதி, முன்நோக்கி
செல்வதே, லேசானதன்மை
ஆகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
மக்கள், சவாலான
சூழ்நிலைகளை,முடித்துவிடவேண்டிய
பிரச்சனைகளாக கருதுகின்றனர்.
பெரும்பாலும்,சூழ்நிலைகளையோ
அல்லது அதில்
ஈடுபட்டிருக்கும் மனிதர்களையோ
நாம் தவிர்கின்றோம்.
மேற்கொண்டு, அனைத்தும்
மாறிவிடவேண்டும் என்றும்
விரும்புகின்றோம். சவால்மிக்க
சூழ்நிலை கடந்து
சென்றவுடன், நாம்
சக்தியிழந்தவராக உணர்கின்றோம்.
செயல்முறை
பிரச்சனைகள் வெறும்
விளையாட்டு என்று
நான் புரிந்துக்கொண்டால்,
நான் செய்ய
வேண்டிய பாகத்தை
என்னால் நடிக்கமுடியும்.
அப்போது, மிகவும்
கடினமான பிரச்சனையை
நான் சந்தித்தாலும்,
நடப்பதில் இருக்கும்
முக்கியத்துவத்தை நான்
புரிந்துகொண்டுள்ளதால்,என்னால்
சிறப்பாக செயல்படமுடியும்.
நான் லேசாக
உணர்வதோடு சந்தோஷமாகவும்
இருக்கின்றேன். பிரச்சனைகள்
என்னை கட்டுபடுத்த
நான் அனுமதிக்காததால்,
என்னால் அவற்றை
திறமையாக கையாள
முடிகின்றது
அன்பு
நல்லாசிகள் நிறைந்த
வார்த்தைகள் மற்றவர்களிடம்
மாற்றத்தை கொண்டுவருகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து
நாம் மற்றவர்களை
திருத்தும்போது, நம்முடைய
வார்த்தைகளுக்கு சிறிதளவே
விளைவு இருப்பதை
நாம் அடிக்கடி
பார்க்கின்றோம். நம்முடைய
சொந்த எதிர்பார்ப்புகளில்
நாம் அதிகமாக
சிக்கிக்கொண்டுள்ளதால், நாம்
அடுத்தவரை புரிந்துக்கொள்ள
தவறிவிடுகின்றோம். அதன்பிறகு,
நமக்கு வேண்டியது
நமக்கு கிடைப்பதில்லை.
மேலும் உறவுமுறையும்,
பரஸ்பரம் திருப்தியில்லாததாகிவிட கூடும்.
செயல்முறை
நான் பேசும்
வார்த்தைகளோடு,நல்லாசிகளையும்
சேர்க்கும்போது, அன்பு
உண்டாகிறது. அன்போடு
பேசப்படும் வார்த்தைகளில்,சுயநலமும் எதிர்மறைத்தன்மையும்
இல்லை. மேலும்
மற்றவர்கள் மீது
சக்திவாய்ந்த பலன்
இருக்கிறது. அன்பாக
பேசப்படும் வார்த்தைகள்
மட்டுமே, மற்றவர்களிடமும்
தன்னிடமும் மாற்றத்தை
கொண்டு வரும்
சுய கட்டுப்பாடு
தன்னைத்தானே கட்டுப்பாட்டில்
வைத்திருப்பதே, உண்மையான
கட்டுப்பாடு ஆகும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
பொதுவாக, கட்டுப்பாடு
என்றால், மற்றவர்கள்
மீதோ அல்லது
சூழ்நிலைகளையோ நம்முடைய
கட்டுப்பாட்டில் வைத்திருப்பது
என்று நாம்
புரிந்துகொள்கின்றோம். சுய-கட்டுபாட்டை பற்றி
மிக அரிதாகவே
சிந்திக்கிறோம். அது
மிகவும் கடினமாகவும்
வலிகொடுப்பதகவும் உள்ளது.
அதனால், நம்முடைய
எண்ணங்கள், வார்த்தைகள்,நடத்தையை மாற்றுவது புதிராக
இருப்பதோடு சுய-கட்டுபாட்டில் ஈடுபாடு
கொள்வது கடினமாக
இருக்கிறது.
செயல்முறை
என் மீது
நான் கட்டுபாடு
வைத்திருப்பது என்பது
மாஸ்டராக இருப்பதாகும்.
என்னுடைய எண்ணங்கள்,வார்த்தைகள் மற்றும்
நடத்தை, என்
கட்டளையின் கீழ்
இருப்பது அவசியம்.
இதுதான் உண்மையான
சுய-கட்டுபாடு.
இதை செய்வதற்கு,
நான் எதற்கும்
அடிமையாக இல்லாமல்,
ஒரு மாஸ்டராக
இருப்பதை பயிற்சி
செய்ய வேண்டும்.
நான் எந்த
அளவிற்கு அதிகமாக
ஒரு மாஸ்டராக
இருப்பதை பயிற்சி
செய்கிறேனோ, அந்த
அளவிற்கு என்னுடைய
அனைத்துமே இயற்கையாகவே
என் கட்டளைக்கு
கீழ் படியும்.
சத்தியம் காப்பது
என்னுடைய சத்தியத்தை
நிறைவேற்றுவதில் ஒவ்வொரு
அடியிலும் நன்மை
இருக்கிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து
பெரும்பாலும் நாம்,
நம்மிடமும் மற்றவர்களிடமும்
சத்தியம் செய்கின்றோம்.
அந்நேரத்தில் நாம்
நேர்மையாக இருந்தாலும்,நடைமுறையில் சிலநேரங்களில்
சத்தியம் நிறைவேற்றப்படுவதில்லை. நம்முடைய நோக்கங்களை
நாம் செயல்படுத்தாவிட்டால்
சத்தியம் பயனற்றது
ஆகிறது.
செயல்முறை
எனக்குள் மாற்றத்தைக்
கொண்டுவருவதற்கான சத்தியத்தை
நான் மேற்கொள்ளும்போது,
நான் உடனடியாக,
சத்தியத்தை நடைமுறைக்கு
கொண்டுவர உதவும்
செயல்முறைத் திட்டத்தை
தீட்டுவது அவசியம்.
அந்த சத்தியத்தை
நிறைவேற்றுவது ஏன்
எனக்கு முக்கியம்
என்பதை நான்
புரிந்துகொள்வதும் அவசியம்.
அந்த காரியத்தை
நிறைவேற்றும்வரை, நான்
ஏற்றுக்கொண்ட பொறுப்பை
எனக்கு நானே
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திக் கொள்வது
அவசியம்.
நேர்மறைதன்மை
ஸ்திரதன்மையின் சக்தியானது
எவ்விதமான சூழ்நிலையையும்
மாற்றக்கூடும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
கடினமான சூழ்நிலையில்,பெரும்பாலும் நம்முடைய
முதல் எண்ணம்
எதிர்மறையானதாக இருக்கிறது.
எதிர்மறையான எண்ணங்கள்
என்ற புயலினால்
நாம் இழுத்து
செல்லப்படுவதற்கான வாய்ப்பு
உள்ளது. அப்பேற்பட்ட
எண்ணங்களால் ஒரு
பயனும் இல்லை.
இது தீர்வுகளிலிருந்து
மேலும் நம்மை
தூர விலக்கி
விடுகிறது.
செயல்முறை
தினந்தோறும் ஒரு
நேர்மறையான எண்ணத்தைப்பற்றி
சிந்திப்பது,எனக்குள்
இருக்கும் ஸ்திரதன்மையை
பேணிக்காக்க உதவுகிறது.
தொடர்ந்து செய்யும்
பயிற்சியானது நான்
மிகவும் கடினமான
சூழ்நிலைகளிலும் உறுதியுடன்
இருப்பதற்கு உதவும்.
மேற்கொண்டு வரவிருக்கும்
எந்த சூழ்நிலையையும்
சந்திப்பதற்கு என்னை
தயாராக்குவதோடு,என்னை
விழிப்படைய செய்து
எனக்கு தேவையான
யுக்திகளை கொடுத்து
கடினமான சூழ்நிலைகளை
வெற்றிகொள்வதற்கு என்னை
ஆயத்தப்படுத்துகிறது.
உற்சாகம்
தொடர்ந்து உற்சாகத்துடன்
இருப்பது மற்றவர்களின்
முன்னேற்றத்திற்கு உதவி
செய்கிறது.
பிரச்சனைகள் எதிர்மறையான
எண்ணங்களினால் நம்மை
பாரமாக உணரச்
செய்யலாம். பாரமான
மனம் நாம்
உற்சாகத்துடன் முன்னோக்கி
செல்வதை தடுத்து
விடுகிறது. அதன்
பிறகு மற்றவர்கள்
முன்னேற நாம்
உதவுவதற்கு நமக்கு
கடினமாக இருக்கிறது.
செயல்முறை
நான் எவ்விதமான
சூழ்நிலைகளை சந்தித்த
போதிலும், உற்சாகத்தோடு
இருப்பதற்கு நான்
விசேஷமான முயற்சி
செய்வது அவசியம்.
உற்சாகம் எனக்கு
தைரியத்தை கொடுப்பதோடு,
மற்றவர்கள் நன்மை
அடைவதற்கு என்னுடைய
தனித்துவமான திறமைகளை
பயன்படுத்த உதவுகிறது.
பிறகு, என்னுள்
இருக்கும் நற்குணங்களை
வெளிக்கொணர்ந்து மற்றவர்களின்
நன்மைக்காக என்னால்
அவற்றை பயன்படுத்த
முடியும்.
தொடர்பு கொள்வது
சரியான வார்த்தைகளை
பேசும்போது, லேசான
தன்மையை பெறுகிறோம்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
சிலநேரங்களில், நம்முடைய
உணர்வுகளை மற்றவர்களுக்கு
புரிய வைப்பது
கடினமாக இருக்கலாம்.
நாம் அதிகமாக
பேசுகின்றோம், ஆனால்,
பெரும்பாலும், நாம்
உண்மையில் அவர்களிடம்
தெரிவிக்க வேண்டிய
விஷயத்தை தெரிவிக்கவில்லை
அல்லது அவர்
நம் கருத்தை
புரிந்துக்கொள்ளவில்லை. அப்போது,
மேற்கொண்டு அதிகமாக
பேசும் போக்கு
இருக்கிறது. இது,
சூழ்நிலையை மோசமாக்கி,
சிலநேரங்களில் மற்றவர்களின்
உணர்வுகளை காயப்படுத்தவும்
கூடும்.
செயல்முறை
நான் சரியாக
பேசுவதற்கு முயற்சி
செய்தால், அதிகமாக
பேசவேண்டிய அவசியம்
இல்லை. நன்றாக
- தேர்ந்தெடுக்கப்பட்ட சில
வார்த்தைகள் கேட்பதற்கு
இனிமையாகவும், மற்றவர்களை
காயப்படுத்தாமலும் இருக்கின்றன.
என்னுடைய பேச்சு,
கருத்தை நோக்கி
தெளிவாகவும் சுருக்கமாகவும்
இருக்கும்போது, நான்
லேசாகவும் சுதந்திரமாகவும்
உணர்கின்றேன்
திடமான நோக்கம்:
திடமான நோக்கத்தோடு
செய்யப்படும் முயற்சியினால்,வெற்றி பெறப்படுகிறது.
சிந்திக்க வேண்டிய
கருத்து
நாம் எவ்வளவு
முயற்சி செய்தோம்
என்பதுடன் வெற்றியை
சம்பந்தப்படுத்தி பார்ப்பதற்கு
பதிலாக, நமக்கு
எவ்வளவு கிடைத்தது
என்பதுடன் நாம்,
சம்பந்தப்படுத்தி பார்க்கின்றோம்.
அதனால், சிலநேரங்களில்
நாம் எதிர்பார்ப்பது
நிறைவேறவில்லையானால், நாம்
வெற்றிபெறவில்லை என்று
நினைப்பதால், எதிர்மறையாக
சிந்திக்கும் மனப்போக்கு
நம்மிடம் இருக்கிறது.
இது, நாம்
மீண்டும் முயற்சி
செய்வதற்கு நமக்கு
ஊக்கமளிக்கவில்லை.
செயல்முறை:
நான் வெற்றி
பெறுவதில் திடமான
நோக்கத்தோடு இருக்கும்போது,
நான் சிறப்பாக
செய்வேன். நான்
எவ்வளவு கடினமாக
உழைக்கின்றேன் என்பதை
மற்றவர்கள் பார்க்கும்போது,
என்னுடைய குறிக்கோளை
நான் அடைவதற்கு
அவர்களால் ஆன
உதவியை செய்து
எனக்கு உதவுவார்கள்.
நான் வெற்றி
பெறுவதில் திடமான
நோக்கத்தோடு இருக்கும்போது,
நான் எதிர்பார்த்த
பலன் கிடைக்கவில்லை
என்றாலும், நான்
வளர்ச்சிபெற்று,முன்னேறுகின்றேன்
புரிந்துணர்வு
உறவுமுறைகளை மேம்படுத்துவதில்
நாம் அக்கறை
கொள்வது, புரிந்துணர்வை
கொண்டுவரும்.
சிந்திக்க வேண்டிய
கருத்து
ஒருவரை பற்றி
நமக்கு பிடிக்காத
விஷயம் ஒன்று
இருக்குமானால்,அதை
பற்றி எதிர்மறையாக
பேசுவது சுலபமாகும்.
பெரும்பாலும், சிந்திக்காமல்
நாம் செயல்பட்டு,
கோபப்படுகின்றோம். நம்முடைய
வார்த்தைகளும் நடத்தையும்
எதிர்மறையாகவும் அவமதிப்பதாகவும்
இருக்கின்றன. இது
மேற்கொண்டு இடைவெளியை
பெரிதாக்கி, உறவுமுறையை
சேதப்படுத்துகிறது.
செயல்முறை
யாராவது விரும்பத்தகாத
ஒன்றை செய்தால்,
நான் முதலில்
முயற்சி செய்து,
அந்த நடத்தையை
புரிந்துக்கொள்வது அவசியம்.
ஒவ்வொருவருக்கும் அவரவர்களின்
நடத்தைக்கு ஒரு
காரணம் இருக்கிறது.
அந்நேரத்தில் என்னால்
அதை புரிந்துக்கொள்ள
முடியாவிட்டால்,அவர்கள்
அவ்வாறு நடந்துக்கொள்ள
காரணம் என்ன,என்று நான் சிந்திப்பது
அவசியம். எந்த
அளவிற்கு நான்
அந்த நபரிடமோ
அல்லது கெட்ட
நடத்தையையோ, எதிர்த்து
செயல்படுகின்றேனோ, அந்த
அளவிற்கு, இடைவெளி
அதிகமாகும். உறவுமுறைகளை
மேம்படுத்துவதற்கு, அடுத்தவரின்
நற்குணங்களை, எனக்கு
நானே நினைவூட்டிகொள்வது
அவசியம்
No comments:
Post a Comment