Breaking

Saturday, September 21, 2019

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்

அனைவரின் ஆசீர்வாதங்களையும் கோருவதே எளிதான முன்னேற்றத்திற்கான வழிமுறை ஆகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து: சில நேரங்களில் நாம் அதிகபடியான முயற்சி செய்வதையும்,  ஏதாவது ஒன்றைச் செய்வதற்கு அதிக ஆற்றலைக் கொடுப்பதையும் பார்க்கின்றோம். ஆயினும்கூட,  நாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஏற்ப முடிவுகள் இல்லை என்பதைக் காண்கிறோம். அது அவ்வாறு நடக்கும் என்று நாம் ஆச்சரியப்படத் தொடங்குகிறோம்.

தீர்வு: சுற்றியுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவது எனது முன்னேற்றத்தின் வேகத்தை அதிகரிப்பதாகும். இதற்காக நான் மகிழ்ச்சியைத் தருவதற்கும்,  என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு துக்கம் கொடுக்காமல் இருப்பதற்கும் விசேஷ கவனம் செலுத்த வேண்டும். இது எனக்கு அவர்களின் ஆசீர்வாதங்களைத் பெற்றுத்தருகிறது,  இந்த சூட்சுமமான நல்லாசிகள் எனக்கு மகிழ்ச்சியையும் வெற்றிகளையும் எளிதில் பெற்றுத்தருகின்றன.

கர்மம் என்பது எண்ணங்கள், சொற்கள், செயல்கள் மூலமாக இந்த புற உலகிற்கு நாம் அனுப்புகின்ற ஒரு ஆற்றல், சக்தி. அது நாம் எய்தும் ஒரு அம்பு போன்றது, இலக்கை தாக்கி விட்டு மீண்டும் நம்மிடமே திரும்பி வந்து விடும். திரும்பி நம்மிடமே வருகின்ற இந்த ஆற்றல்தான் நம்முடைய விதி, தலையெழுத்து, கர்மத்தின் விளைவு - நமது ஆரோக்கியம், நமது வாழ்க்கை, நமது உறவுகள், நமது சம்மந்தங்கள், நமது சூழ்நிலைகள் - இவை தினமும் நம்மிடம் வந்து கொண்டே இருப்பவை.

நாம் அனைவரிடமும் நல்ல விதமாகவே இருக்கிறோம் ஆனால் நமக்கு மட்டும் ஏன் எதுவுமே சரியாகவே நடப்பதில்லை என பல முறை நமக்கு நாமே ஆதங்கப்பட்டிருக்கும் அனுபவம் அனைவருக்குமே இருக்கும். நாம் உடனே கர்மத்தின் விதிகளைப் பற்றி பல கேள்விகள் எழுப்பி, அது நியாயமானது இல்லை என்போம். இந்த கர்ம சட்டம் (law/rule) என்பது ஒரு ஆன்மீக சட்டம், அது ஆத்மாவிற்குப் பொருந்தும். ஆத்மா தான் அத்தகைய கர்மங்களைச் செய்துள்ளது (செய்கிறது!), இந்த உடல் செய்யவில்லை. ஆத்மா தான் தொடர்ந்து பயணிக்கிறது மேலும் கர்மங்களைச் செய்ய அந்த பயணத்திற்குத் தகுந்த ஆத்மாவின் ஆடைதான் இந்த உடல். ஒவ்வொரு ஆடையிலும் நாம் பல ஆத்மாக்களைச் சந்திக்கிறோம் மேலும் கர்மத் தொடர்பும் ஏற்படுத்துகிறோம். காலம் செல்லச்செல்ல நாம் இருவருமே நமது ஆடையை (உடல்) மாற்றிக் கொள்கிறோம் ஆனால் நமது கர்மத் தொடர்போ ஆத்மாக்களுடன்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், எனினும் அந்த ஆத்ம சம்பந்தம் தொடர்கிறது.

உதாரணமாக, இன்று நாம் ஒரு நண்பரை சந்திக்கிறோம் மேலும் அவருடன் தீவிரமான வாக்குவாதம் நடைபெற்று அந்த சந்திப்பானது கசப்பானதாக முடிகிறது என வைத்துக் கொள்வோம். நாம் அவரை மீண்டும் ஒரு வாரத்திற்குப் பின் சந்திக்கிறோம் ஆனால் இம்முறை நாம் இருவருமே வெவ்வேறு ஆடைகளில் உள்ளோம் (புதிய மனநிலை); இருப்பினும் இந்த இரண்டாவது சந்திப்பானது முதல் சந்திப்பில் நடந்த வாக்குவாதத்தின் தாக்கத்தினால் இனிமையானதாக ஆரம்பமாகாது. நாம் இருவருமே மனக்கசப்பின்றி ஒருவருக்கொருவர் பேச மாட்டோம். அடுத்த மாதம் சந்திக்கும்போது நாம் இருவருமே பேசாமலேயேப் போய் விடுவோம்.

ஒவ்வொரு சந்திப்பும் அடுத்த சந்திப்பை முன்னோக்கி எடுத்துச்செல்லும். இருவரில் ஒருவர் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டி விட வேண்டும் என தீர்மானித்து, நமது உரையாடலை அமைதியான முறையில் ஆரம்பித்தோம் எனில் அந்த சந்திப்பின் தரம் மாறும் மேலும் இது அடுத்த சந்திப்பிலும் தொடரும். இது கர்ம சம்பந்தங்களின் தொடர்ச்சி சக்கரமாகும்.

அதேபோல, நமக்கு ஒருவருடன் சம்பந்தத்தில் ஏதாவது மோதல் ஒரு பிறவியில் ஏற்பட்டது என்றால் அடுத்த முறை நாம் சந்திக்கும் போது அந்த மோதல் தொடரும். நம் இருவரில் ஒருவர் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என தீர்மானித்து, நம்பிக்கையுடன் இந்த கர்மக் கணக்கின் தரத்தை மாற்றம் செய்தால் ஒழிய, இது அப்படியே பல பிறவிகள் தொடரும். நாம் தினமும் சந்திக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் எவருமே நாம் முதன் முறையாக சந்திப்பவர்கள் அல்ல. இதற்கு முன்பே சந்தித்துள்ளோம் மேலும் இதனால் நம்மிடையே ஆற்றலின் பரிமாற்றம் ஆகியுள்ளது.

இன்று நாம் அவர்கள் மூலம் அனுபவிப்பவை அனைத்தும் முந்தைய சந்திப்பின் ஒரு தொடர்ச்சியே. ஒருவர் நம்முடன் நன்றாக நடந்து கொள்ளவில்லை, ஏமாற்றி விட்டார் எனில் நாம் அவருக்கு முன்பு கொடுத்ததை திருப்பித் தருகிறார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் ஏதும் தவறு செய்யவில்லை, எல்லாம் மிகச் சரியாகத் தான் நடக்கிறது. நம்மால் அவரது செயலை ஜீரணிக்க முடியவில்லை, கர்மக் கணக்கை புரிந்து கொள்ளவில்லை, எனவே கொந்தளிக்கிறோம். அவரது செயலை நம்மால் மாற்ற முடியாது, இது நமது கர்மத்தின் விளைவு; ஆனால் நாம் எவ்வித மனநிலையுடன் இருக்க வேண்டும், எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற இந்த செயல் நம் கையில் உள்ளது, ஏனெனில் நமது தற்கால செயலே நமது இன்றைய இலக்கையும் (தலைவிதியை!), எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது.

நாம் கோபப்படவோ, பழி வாங்கவோ, காயப்படுத்தவோ செய்தால், அது எதிர்மறை கர்மக் கணக்கு என்ற பாவக்குழியில் நாமே சென்று வலிய விழுவதாகும். அதுவே, கருணை, மன்னிப்பது, மறப்பது என்ற உயரிய குணங்களால் மாற்றம் செய்தோமானால் அது நேர்மறையான நல்ல கர்மக் கணக்கை உருவாக்குவதாகும். அதாவது நாம் நமது விதியை, இலக்கை, எதிர்காலத்தை உருவாக்குகின்றோம்.

இன்று முதல் ஒவ்வொரு ஆத்மாவையும் பார்க்கும் போது நாம் இதற்கு முன்பே இவரைச் சந்தித்துள்ளோம் மேலும் மீண்டும் சந்திப்போம் என்பதை நினைவில் கொள்வோம். கடந்தவற்றை நம்மால் மாற்ற முடியாது ஆனால் நிகழ்காலத்தில் மிகக் கவனமாக இருந்து, ஒவ்வொரு ஆத்மாவுடனும் நேர்மறையான நல்ல செயல்களையேச் செய்வோம். இன்றைய ஒவ்வொரு சூழ்நிலைக்கும் காரணம் நாம் செய்த கர்மங்களே. இன்றைய நமது பதிலும் நடத்தையும் நமது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்!

கர்மா என்பது என்ன? 

கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்தக் கதை இதோ:
ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்!

அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது என்றான்.

மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!

அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்!
அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்!

அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன்என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்!

நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன்.

அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்!
அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும் என்றான் கடைக்காரன்!

அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது!

இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!

மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்!

தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்!

அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்!

அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்!

அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்!

அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது!

இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்!

அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!

குரு சிஷ்யர்களைக் கேட்டார்சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்!.

பல சீடர்கள்

அதற்கு பல விதமாககர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள் என்றெல்லாம் பதில் கூறினர்!!

*குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார்இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே.. “*

நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்!

மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் .

நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்

நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்.
*எனவே நல்லதையே தேடுவோம் நல்லதை யே சிந்திப்போம் நல்லதே நடக்கட்டும்

No comments:

Post a Comment